»   »  ஹோட்டல் அறையில் மானபங்கம் செய்ய முயற்சி: போலீசில் நடிகை புகார்

ஹோட்டல் அறையில் மானபங்கம் செய்ய முயற்சி: போலீசில் நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஊழியர் ஒருவர் மானபங்கம் செய்ய முயன்றதாக பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார் அளித்த நடிகையின் பெயர் குஷி முகர்ஜி என்பதாகும். இவர் ‘சட்ட பரிவர்த்தன்' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு சென்றார். அங்கு ஒரு ஹேட்டலில் தங்கினார்.

மானபங்க முயற்சி

மானபங்க முயற்சி

இரவு நேரத்தில் அவர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஹேட்டலில் வேலை பார்க்கும் சிறுவன், அறைக்குள் புகுந்து அவரை மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

நடிகையின் அலறல் சத்தத்தை கேட்டு, ஓட்டல் ஊழியர்கள், அச்சிறுவனை பிடித்தனர். நடிகையின் புகாரின் பேரில், அவன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். பின்னர் இந்த சம்பவம் குறித்து நடிகை குஷி முகர்ஜி போலீசில் புகார் அளித்தார்.

எல்லாம் ஒரு வௌம்பரம்…

எல்லாம் ஒரு வௌம்பரம்…

ஆனால், ஹோட்டல் மேலாளரோ, இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று கூறியுள்ளார். படத்தின் விளம்பரத்துக்காக நடிகை இக்குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது, நடிகை குஷி முகர்ஜி, மது போதையில் அறைக்கதவை திறந்து போட்டிருந்ததாகவும், அதைப்பார்த்த சிறுவன், கதவு திறந்து கிடப்பதை தெரிவிக்க உள்ளே நுழைந்ததாகவும் மேலாளர் கூறினார்.

கண்காணிப்பு கேமராவில்

கண்காணிப்பு கேமராவில்

இருப்பினும், என்ன நடந்தது என்பதை அறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால், சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாக ஹேட்டல் நிர்வாகம் மீது நடிகை குஷி முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
Bollywood actress Khushi Mukherjee was allegedly molested inside her hotel room in Bhopal on Friday night. The actor was present in the city for the shoot of upcoming movie 'Satta Parivartan'. The actress has alleged that someone from among the hotel staff entered her room while she was asleep and tried to touch her.
Please Wait while comments are loading...