அமலா பாலின் ஓணம் ஸ்பெஷல்.. எப்போதும் இதே மகிழ்ச்சியுடன் இருக்கணும்.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!

சென்னை: ஓணம் பண்டிகை நேற்று கேரளா முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் ஓணம் ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை அமலா பால், தலைவா பட இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்காமல் பாதியில் முடிந்து போனது. அதன் பின் இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், விவகாரத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்த அமலா பால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்தார். மன வேதனையில் இருந்த அமலா பால் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சரக்கும் பாட்டிலுடன் தத்துவம் பேசிவந்தார். அவரின் மனநிலையை மேலும் பாதிக்கும் வகையில் அவருக்கு எந்த படமும் இல்லாததால் பெரும் மன அழுத்தத்தில் இருந்தார் அமலா பால்.

Amala Paul Jagat Desai Onam
Photo Credit:

காதல் திருமணம்: இதையடுத்து, நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய்வை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதனால், திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தியும் பரவியது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாக அறிவித்தார்.

வாழ்த்தும் ஃபேன்ஸ்: குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வரும் அமலா பால் தற்போது, குடும்பத்தோடு ஓணம் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில், அமலா பால் தனது குழந்தையை கொஞ்சி விளையாடுகிறாள். அதே போல, தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் இப்போதும் இதே மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என அமலா பாலை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X