twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவிலுக்குள் நுழைய அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு..ரோட்டில் நின்று தரிசனம்..இதுதான் காரணம்!

    |

    சென்னை : நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை அமலா பாலுக்கும் சர்ச்சைக்கும் பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருக்கும். அம்மணி என்ன செய்தாலும் அது சர்ச்சையாகி பேசுபொருளாகி விடும்.

    அமலா பால் தமிழில் என்ட்ரி கொடுத்த முதல் படமான சிந்து சமவெளியே விவகாரமான படம் என்பதால், தற்போது வரை அந்த சர்ச்சை விட்டகுறை தொட்ட குறையாக தொடர்ந்து கொண்டே வருகிறது.

    நடுவிரலை காட்டிய அமலா பால்... என்ன இதெல்லாம் விளாசும் நெட்டிசன்ஸ்! நடுவிரலை காட்டிய அமலா பால்... என்ன இதெல்லாம் விளாசும் நெட்டிசன்ஸ்!

    நடிகை அமலா பால்

    நடிகை அமலா பால்

    சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், கோலிவுட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்த போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டதால், அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அமலா பால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தார்.

    ஏமாற்றமே மிஞ்சியது

    ஏமாற்றமே மிஞ்சியது

    விவாகரத்துக்கு பின் ஆண் நண்பர்களுடன் சரக்கு, பார்ட்டி என செம ஜாலியாக இருத்த அமலா பால், ஆடை படத்தில் முற்றும் துறந்த முனிவர் போல ஆடை இல்லாமல் நடித்தார். ஆடை படம் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என்று நினைத்த அமலா பாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த படம் அமலா பாலுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துவிட்டது.

    தமிழில் படவாய்ப்பு இல்லை

    தமிழில் படவாய்ப்பு இல்லை

    தற்போது தமிழில் அமலா பாலுக்கு சொல்லும்படி எந்த படமும் இல்லை. ஆனால் இந்தியில், மலையாளத்தில் என 4 படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் கடாவர் படம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை நடிகை அமலா பாலே தயாரித்திருந்தார். இந்த படத்தில், ஹேர் ஸ்டைல், கெட்டப் என அனைத்தையும் மாற்றி வித்தியாசமாக நடித்திருந்தார் அமலா பால்.

    கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை

    கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை

    இந்நிலையில்,நடிகை அமலா பால், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். ஆனால், கோவிலில் இருந்த நிர்வாகிகள், அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்காமல், சாலையில் நின்று சாமி தரிசனம் செய்யும்படி கூறியுள்ளனர்.

    அமலா பால் வேதனை

    அமலா பால் வேதனை

    இது குறித்து நடிகை அமலா பால், அங்குள்ள பதிவேட்டில் 2023ம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. இதுபோன்ற மத பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புவதாகவும் அந்த பதிவேட்டில் அமலா பால் எழுதியுள்ளார். மதத்தை காரணம் காட்டி நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.

    English summary
    Actress Amala Paul denied entry to Kerala Thiruvairanikulam Mahadeva temple
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X