போட்டோ எல்லாம் ஒரு மாதிரி இருக்கே.. காலை தூக்கி போட்ட அமலா பால்.. கணவராக இருந்தாலும் இப்படியா?
சென்னை: நடிகை அமலா பாலு குழந்தை பிறந்த பின் இணையத்தில் அவ்வப்போது கணவரோடு இருக்கும் போட்டோ, குழந்தையுடன் இருக்கும் போட்டோ என பலவற்றை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அமலா பால் தனது கணவர் மீது காலை தூக்கிப்போட்டு விவகாரமாக போஸ் கொடுத்து உள்ளார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பாலுக்கு, அந்த படம் விவகாரமான நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, கணவர் கல்லூரிக்கு படிக்க சென்ற நேரத்தில், மாமனாருடன் எல்லை மீறிய உறவு வைத்துக்கொள்வோர். சொல்வதற்கே சங்கடமாக இருக்கும் அந்த ரோலில் நடிகை அமலா பால் துணிந்து நடித்து இருந்தார். இதன் காரணமாக, பலரது கவனம் அமலா பால் மீது திரும்பியது.
நடிகை அமலா பால்: சிந்து சமவெளி என்ற விவகாரமான படத்திற்கு பின், மைனா படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து இருந்தார். அந்த படத்தில் அமலா பாலின் நடிப்பு அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பின் விக்ரம் , தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததார்.

தப்புக்கணக்கு: அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த அமலா பால், தலைவா பட இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிக்கக்கூடாது என்று ஏ.எல்.விஜய் கூறியதால், பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். விவகாரத்திற்கு பின் மீண்டும் அமலா பால், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்தார். இந்த படமும் சிந்து சமவெளி போல நெகட்டிவ் விமர்சனத்தால் பெயர் எடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால், அமலா பாலின் கணக்கு தப்பாகி தமிழில் அவருக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து ஆடுஜீவிதம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது.
இரண்டாவது திருமணம்: அமலா பாலை விவாகரத்து செய்த ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போதும், யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த அமலா பால், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமண சில நாட்களிலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்துள்ளார்.

கணவராக இருந்தாலும் இப்படியா: குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் அமலா பால், தனது கணவர் மீது காலை போட்டு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், போட்டோ எல்லாம் ஒரு மாதிரி இருக்கே என்றும், கணவராக இருந்தாலும் இப்படியா? என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











