தன்னை கல்யாணம் செய்துக்க எப்படி இருக்கணும்.. அமலா பால் சொல்லியிருக்கறத பாருங்க!

சென்னை : நடிகை அமலா பால் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது படவாய்ப்புகள் அதிகமாக இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார். மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதேபோன்ற கதாபாத்திரங்களில் மாட்டிக் கொள்ளாமல் மைனா உள்ளிட்ட சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்தார் அமலா பால்.

விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன் ஜோடி

இவர் நடித்த மைனா படம் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அப்பாவி பெண்ணாக வந்து கடைசியில் உயிரிழக்கும் இந்த கேரக்டர் இவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார். விஜய்யுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

திருமணம் -விவாகரத்து

திருமணம் -விவாகரத்து

பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் சிறப்பான தம்பதிகளாக இருந்த நிலையில், இவர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்துக் கொண்டனர். விவாகரத்திற்கு பின்பு ஆடை உள்ளிட்ட அதிரடியான படங்களில் மீண்டும் நடித்தார்.

தயாரிப்பில் அமலா பால்

தயாரிப்பில் அமலா பால்

இதன்மூலம் ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார். தற்போது நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் காடவர் என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த பிறந்தநாளில் இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டிலை அறிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இந்தப் புகைப்படங்கள் வித்தியாசமாக காணப்பட்டன. தற்போது இந்தப் படத்தை தவிர இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக இல்லாத சூழலில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

 ரசிகர்களுக்கு பதில்

ரசிகர்களுக்கு பதில்

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த அமலா பால் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அவரை திருமணம் செய்துக் கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமலா பால், அதை தானே இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
திருமணம் செய்ய தகுதி

திருமணம் செய்ய தகுதி

தன்னைத் தானே புரிந்துக் கொள்ளும் பயணத்தில் உள்ளதாகவும், இதை கண்டுபிடித்தப் பின்பு இந்த கேள்விக்கு பதிலளிப்பதாகவும் அவர் கூறினார். தற்போது அவர் தன்னுடைய நண்பருடன் பாண்டிச்சேரியில் செட்டில் ஆகியுள்ளதாகவும் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X