நான் என்ன டிரெஸ் போடணும்..போடக்கூடாதுன்னு எவனும் சொல்லமுடியாது.. நெட்டிசன்களை விளாசிய அமலா பால்!
சென்னை: தான் பிகினி அணிந்து போஸ் கொடுத்தது குறித்து விமர்சித்த நெட்டிசன்களை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார் நடிகை அமலா பால்.
மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்ததுமே அமலா பாலின் கிராஃப் தாறு மாறாய் எகிறியது. முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்த அமலா பால் டாப் நடிகையாக வலம் வந்தார்.

ஆடை படத்தில் அமலா பால்
விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார் அமலா பால். இதனால் குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட படங்களில் நடித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார் நடிகை அமலா பால்.

விமர்சனத்துக்குள்ளான அமலா பால்
இந்த படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகையும் இப்படி ஒரு கோலத்தில் நடிக்காத நிலையில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் பேசு பொருளானது.

அதோ அந்த பறவை போல
இதனை தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார் அமலா பால். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. அமலா பால் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட யாரும் முன் வரவில்லை.

கிளாமர் போட்டோஸ்
இதனால் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார் அமலா பால். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீப காலமாக அமலா பால் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் படு கிளாமராக உள்ளது.
Recommended Video

சரக்கு பாட்டிலுடன் ஆட்டம்
பொது நிகழ்ச்சிகளுக்கும் கூட முகம் சுளிக்கும் வகையிலேயே உடை உடுத்தி வருகிறார் அமலா பால். அண்மையில் கையில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்டார் அமலா பால். அந்த வீடியோ பெரும் வைரலானது. ரசிகர்கள் பலரும் நடிகை அமலா பாலை ஏன் இப்படி என விமர்சித்தனர்.

மீண்டும் விமர்சனத்துக்குள்ளான அமலா பால்
அந்த சூடு தணிவதற்குள்ளேயே பிகினியில் கடற்கரையில் ஆட்டம் போட்டார் அமலா பால். பிகினி உடையில் படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்திய அமலா பால் அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்தார். இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் விமர்சனத்துக்குள்ளனார் அமலா பால்.

எப்படி விரும்புகிறேனோ அப்படியே
பிகினியில் போட்டோ ஷூட் நடத்திய அமலா பாலை திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமலா பால். இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுக்குப் அவர் பதிலளித்திருப்பதாவது, நான் எனது வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறேனோ அப்படியே வாழ்வேன்.

மூன்றாம் நபருக்கு அனுமதியில்லை
பெண்களை சமூகவலைதளங்கள் வாயிலாக தாக்குவதை நிறுத்துங்கள். ஒரு பெண் அவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரின் விருப்பம், தேர்வைப் பொருத்தது. அதில் மூன்றாம் நபர் தலையிட்டு கருத்து கூற, இப்படிச் செய், அப்படிச் செய் என்றெல்லாம் உத்தரவிட அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











