லாக் டவுன் எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்ல.. மீம்ஸ் ஷேர் செய்து அமலா பால் உருக்கம்!

சென்னை நடிகை அமலா பால் லாக் டவுன் குறித்து மீம்ஸ் வெளியிட்டு உருக்கமாக பேசியிருக்கிறார்.

நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் அம்மா கணக்கு படத்தின் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்டை தொடங்கினார்.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த வந்தார் அமலா பால். தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் நடிகை அமலா பால் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது நீண்ட நாள் காதலரான பாவ்னீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் அந்த திருமணத்திலும் பிரச்சனை என கூறப்பட்டு வருகிறது.

லாக் டவுன் மீம்ஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அமலா பால், மீம்ஸ் வாயிலாக தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை மறைமுகமாக கூறினார். இந்நிலையில் மீண்டும் மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் அமலா பால். அதில் லாக்டவுன் காலத்தில் சந்தோஷமாக வீட்டில் இருக்கும் குடும்பமும், கையில் பணம் இல்லாமல் உண்டியலில் இருக்கும் சில்லறையை ஒரு குடும்பத்தினர் எடுப்பது போன்றும் உள்ளது.

நன்றியுள்ளவர்களாக

நன்றியுள்ளவர்களாக

மேலும் அதில் லாக் டவுன் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீம்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சிறிய அசவுரியம் பெரும்பாலானோரின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். நெருக்கடிக்கு மத்தியில், நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை எண்ணுவோம், சிறிய இரக்கங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

மாற்றம் வரும்

மாற்றம் வரும்

இந்த சோதனை காலங்களில், நம் சக சகோதரர்களுக்கு உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து செய்வோம். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவியாக இருங்கள். பால்காரர், வாட்ச் மேன், டிரைவர்களுக்கு உதவி செய்யுங்கள். முன்னாள் பணியாளர்கள் நன்றாக இருக்கிறார்களா? என்று விசாரியுங்கள். எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். இதன் மூலம் உலகில் மாற்றம் வரும் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X