அதுக்குள்ளேயே இப்படியா.. பாத் டப்பில் படுத்தப்படி போட்டோ ஷூட் நடத்திய பிகில் நடிகை!

சென்னை: பாத் டப்பில் படுத்தப்படி பிகில் நடிகை நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அம்ரிதா அய்யர். கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்த இவர், அப்போதே மாடலாக வலம் வர தொடங்கி விட்டார்.

ரஜினிகாந்தின் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா மற்றும் தெறி ஆகிய படங்களில் அன் கிரெடிட்டட் ரோல்களில் நடித்துள்ளார் அம்ரிதா.

காளி படத்தில்

காளி படத்தில்

2018ஆம் ஆண்டு வெளியான படை வீரன் படத்தின் மூலம் மலர் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்ரிதா அய்யார். இதனை தொடர்ந்து காளி படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடிகளில் ஒருவராக நடித்தார்.

பிகில் படத்தில்

பிகில் படத்தில்

கடந்த 2019ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் தமிழ் நாடு அணியின் கேப்டனாக நடித்தார் அம்ரிதா அய்யர். கன்னட சினிமாவில் வினய் ராஜ்குமாருடன் கிராமயானா படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார் அம்ரிதா.

வணக்கம் டத மாப்பிள்ளை

வணக்கம் டத மாப்பிள்ளை

தெலுங்கில் ரெட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கடைசியாக ஜீவி பிரகாஷின் வணக்கம் டா மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார் அம்ரிதா அய்யர்.

தடுப்பூசி போட்டோக்கள்

தடுப்பூசி போட்டோக்கள்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை அம்ரிதா அய்யர், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டார் அம்ரிதா.

பாத் டப்பில் படுத்தப்படி

பாத் டப்பில் படுத்தப்படி

இந்நிலையில் நடிகை அம்ரிதா அய்யர், பாத் ரூமில் பாத் டப்பில் படுத்தப்படி போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அம்ரிதா அய்யரின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

அக்கப்போருக்கு அளவில்லையா?

அக்கப்போருக்கு அளவில்லையா?

அந்த போட்டோவுக்கு போஸ் கொடுக்க இது நல்ல இடம் என்று நினைத்தேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அம்ரிதா. இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்க அக்கப்போருக்கு அளவில்லையா என கேட்டு வருகின்றனர்.

வேற இடமே இல்லையா?

வேற இடமே இல்லையா?

இன்னும் சிலர் டப்பில் தண்ணீர் இருக்கா என்றும் கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் உங்களுக்கு போஸ் கொடுக்க வேற இடமே கிடைக்கலையா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X