Amy jackson: கன்னத்தில் டொக்கு.. எலும்பும் தோலுமாக இருக்கும் எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோ!
சென்னை: மதராசபட்டினம், தெறி, எந்திரன், தங்கமகன் என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன். இரண்டு குழந்தைக்கு தாயான எமி ஜாக்சான் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார்.
ஏ.எல் விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் எமி ஜாக்சன். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எமி இருந்ததால், அந்த படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆர்யாவிடம் '' மறந்துட்டியா '' என கொஞ்சும் தமிழில் அவர் பேசியதைத் கேட்டரசிகர்கள், அவரின் அழகில் மட்டும் மயங்காமல் பேச்சிலும் மயங்கிப்போனார்கள். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரமுடன் ஐ, தாண்டவம், உதயநிதியுடன் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0, தனுஷூடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அண்மையில் எமி ஜாக்சன் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் படத்தில் நடித்திருந்தார்.

காதலரை பிரிந்தார்: நடிகை எமி ஜாக்சன், தனது காதலர் ஜார்ஜூடன் பல ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்த நிலையில், ஆண் குழந்தைக்கு தாயானார் எமி. குழந்தை பிறந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால், அதற்கு முன்பே, எமி ஜாக்சனுக்கும் அவரது காதலர் ஜார்ஜூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் பின், இன்ஸ்டாகிராமில் இருந்து தனது காதலர் ஜார்ஜின் போட்டோவை நீக்கிவிட்டு, ஜார்ஜை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இரண்டாவது குழந்தை: காதலரை பிரிந்து தனியாக வசித்து வந்த எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளான டேட்டிங், பார்ட்டி, திரைப்பட விழா என இருவரும் பல இடத்தில் சுற்றித்திருந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு தனது காதலர் நடிகர் எட் வெஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நண்பர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, திருமணமான இரண்டே மாதத்தில் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக எமி அறிவித்திருந்த நிலையில், எமி ஜாக்சன் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் வைத்துள்ளார்.
அடையாளமே தெரியல: இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் படத்தில் பிஸியாக நடித்து வரும் எமி ஜாக்சன் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியா எடை குறைத்து காணப்படுகிறார். கன்னத்தில் டொக்கு விழுந்து எலும்பும் தோலுமாக இருக்கும் எமி ஜாக்சனைப் பார்த்த இணையவாசிகள், மதராசபட்டினம் இப்படி இருந்தீங்க அந்த எமி தான் எங்களுக்கு வேண்டும், என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











