Don't Miss!
- News
வேலைவாய்ப்பு.. 5ஜி பயன்படுத்தி புது செயலிகள் உருவாக்க 100 நவீன லேப்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புது காதலருடன் நெருக்கமாக இருக்கும் எமி ஜாக்சன்.. டிராண்டாகும் ரொமான்டிக் போட்டோ !
சென்னை : நடிகை எமி ஜாக்சன் புது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன். விஜய், தனுஷ், ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
வெளிநாட்டு நடிகையான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலனுடன் இணைந்து குழந்தையை பெற்றுக்கொண்டார்.
IIFA 2022 : சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள்... முழுமையான பட்டியல் !

எமி ஜாக்சன்
ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் ஹாலிவுட் மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் மூலம் ஆனார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்தார்.

திருமணம் ஆகாமல் குழந்தை
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் நடித்து தொழிலதிபரை காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றேடுத்தார்.

காதலை பிரிந்தார்
இதையடுத்து, கடந்த வருடம் இருவரும் திடீரென பிரிந்தனர். இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜின் புகைப்படங்களையும் அவரின் பெயரை திடீரென நீக்கினார். இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

புது காதலருடன் எமி
இதையடுத்து, பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் ஜோடியாகப் பல இடங்களில் சுற்றிய புகைப்படங்கள் வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாயின. இதையடுத்து, முதன்முறையாக, நடிகை எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து உறுதியாகி உள்ளது.