»   »  அரைகுறை ஆடை... கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்தம்... இயக்குநர்கள் மீது ஆனந்தி சரமாரி புகார்

அரைகுறை ஆடை... கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்தம்... இயக்குநர்கள் மீது ஆனந்தி சரமாரி புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் நடித்த படங்களில் முன்னர் கூறிய கதையை மீறி இயக்குநர்கள் தன்னை கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்தித்ததாக நடிகை ஆனந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபு சாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார்.

தற்போது, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. சாம் ஆண்டன் இயக்கி உள்ள இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

குற்றச்சாட்டு...

குற்றச்சாட்டு...

இந்நிலையில், இப்படத்தில் தன்னை கவர்ச்சியாக நடிக்கும்படி இயக்குநர்கள் நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஆனந்தி. இது குறித்து அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன்.

கயல்...

கயல்...

கயல் படத்தில் டைரக்டர் பிரபு சாலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்பட பல படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

தாதா மகள்...

தாதா மகள்...

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. நல்ல கதாபாத்திரம் இந்த படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாக பழகினார்கள். அக்கறையோடு பார்த்துக்கொண்டனர்.

வற்புறுத்தல்...

வற்புறுத்தல்...

ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. டைரக்டர் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன்.

அரைகுறை ஆடை...

அரைகுறை ஆடை...

அரைகுறை ஆடையை கொடுத்தும் உடுத்த சொன்னார்கள். என் உடல்வாகுக்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன்.

மிரட்டல்...

மிரட்டல்...

எனவே கவர்ச்சி ஆடைகளை உடுத்த மாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன்.

முன்னெச்சரிக்கை...

முன்னெச்சரிக்கை...

இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் டைரக்டரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Anandhi has accused that some directors have forced her to act glamoursly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil