Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
“ஓயாயா ஓயாயா… வாயா ஆசை வீரா”: ரசிகர்களை சூடேற்றிய ஆண்ட்ரியாவின் ஒருநிமிட வீடியோ…
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
நடிகையாக மட்டும் இல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியவர் ஆண்ட்ரியா.
இந்நிலையில், ஆண்ட்ரியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மெழுகு
பொம்மையாக
உருகி
நிற்கும்
ஆண்ட்ரியா:
பிசாசு
2
படத்தின்
சூப்பர்
அப்டேட்டுடன்
ஸ்பெஷல்
ட்விட்

பச்சைக்கிளி முத்துச்சரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, ரசிகர்களின் க்ளாமர் ஹாட் பாக்ஸாக கலக்கி வருகிறார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் வேற லெவலில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார். நடிகையாக மட்டும் அல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார். மிஷ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலானது.

பாடல்களிலும் கிக்
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. கண்களாலேயே ரசிகர்களை கிறங்க வைக்கும் ஆண்ட்ரியா, பாடல்களிலும் செம்மையாக கிக் ஏத்துவார். அந்நியன் படத்தில் 'கண்ணும் கண்ணும் நோக்கியா', யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற 'ஓ பேபி ஓ பேபி', ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் 'உம் மேல ஆசைதான்', போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல் மெலடியான பாடல்களையும் அதிகம் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.

ஊ சொல்றியா மாமா?
நடிகையாகவும் பாடகியாகவும் ரவுண்டு கட்டி வரும் ஆண்ட்ரியா, சில வருடங்கள் முன்னர் அனிருத்துடன் காதல் என கிசுகிசுக்களில் சிக்கினார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் 'ஊ சொல்றீயா மாமா' பாடலை பாடி, பலரின் தூக்கத்தை கெடுத்தார் ஆண்ட்ரியா. திரையில் சமந்தா கிக் ஏத்தினார் என்றால், ஆண்ட்ரியா தனது செக்ஸியான குரலில் ரசிகர்களை சொக்க வைத்தார். ஆண்ட்ரியாவின் பிசாசு 2 படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவரது வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஒருநிமிட வீடியோ
திரைப்படங்களில் பாடுவது மட்டும் இல்லாமல், நிறைய ஆல்பங்களிலும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஆண்ட்ரியா, தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாடல்கள் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மேல் தான் உருவாகும். ஆனால், ஆண்ட்ரியா இப்போது ஒருநிமிட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். "ஓயாயா ஓயாயா... வாயா என் ஆசை வீரா" என எப்போதும் போல ரசிகர்களை சூடேற்றும் வகையில் ஆண்ட்ரியா பாடியுள்ள இந்தப் பாடலை, அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவரே பாடி கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ள இந்த வீடியோவை, ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.