கையில் அரை டசன் படங்கள்… பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா… கடுப்பாகும் முன்னணி நடிகைகள்!

சென்னை : நோ என்டரி, வட்டம்,மாளிகை,கா , பிசாசு 2, அரண்மனை என அரை டசன் படங்களை நடிகை ஆண்ட்ரியா கையில் வைத்துள்ளார்.

Recommended Video

Miss Universe 2021 Winner Andrea Gaza | India Model Adline Castelino In TOP 5

ஆண்ட்ரியா தற்போது, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் இப்படத்தை இயக்க உள்ளார்.

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஹீரோயின் சப்ஜெட் திரைப்படமாக உருவாக உள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை வாரிக்குவித்தது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தி இருந்ததால், அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

பின்னணி பாடகி

பின்னணி பாடகி

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.

பிசாசு 2

பிசாசு 2

பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடரந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

சிவப்பு நிற போஸ்டரில்.. குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இந்த வருட இறுதிக்குள் தியேட்டரில் படம் வெளியாகவிருக்கிறது என்பதையும் அறிவித்திருக்கிறது படக்குழு. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருதும் கிடைக்கும் என்று மிஷ்கின் சமீபத்தில் கூறியிருந்தார்.

மீண்டும் வெற்றிமாறனுடன்

மீண்டும் வெற்றிமாறனுடன்

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனந்த் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்டாக உருவாக இருக்கிறது. ஆண்ட்ரியா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படத்தில் சந்திரா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

நோ என்டரி, வட்டம்,மாளிகை,கா , பிசாசு 2, அரண்மனை என அரை டசன் படங்களை நடிகை ஆண்ட்ரியா கையில் வைத்துள்ளார். கோலிவுட்டில் படு பிஸியான நடிகையாக ஆண்ட்ரியா இருப்பதால், அவரது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற முன்னணி நடிகைகள் ஆண்ட்ரியாவின் இந்த வளர்ச்சி கண்டு வியந்துள்ளனர்.

வெற்றிமாறன் படுபிஸி

வெற்றிமாறன் படுபிஸி

வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும்,நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும், லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள அதிகாரம் படத்தை தயாரித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X