Don't Miss!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- News
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லுங்களேன்..கி.வீரமணி
- Travel
சர்ஃபிங் முதல் பீச் வாலிபால் வரை – பல்வேறு அம்சங்கள் கொண்ட சென்னையின் அழகிய கடற்கரை!
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்க செய்யப்போகும் மோசமான தவறு என்ன தெரியுமா? தெரியாமகூட இத பண்ணாதீங்க!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அது காதல் இல்லை... நான் அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்: அஞ்சலி சொன்ன ஷாக்கிங் நியூஸ்
சென்னை: தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி.
ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தொடர்ந்து சிறந்த கதைகளில் நடித்து வரும் அஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது குறித்து அஞ்சலி மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
ஜெய்யுடனான காதல் தான் சினிமா மார்க்கெட் காலியாக காரணமா? நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்!

கதைகளின் நாயகி அஞ்சலி
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்கும் நடிகைகள் மத்தியில், சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி அஞ்சலி. 2007ம் ஆண்டு ராம் இயக்கிய கற்ற்து தமிழ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்ற அவர், அடுத்து வசந்தபாலனின் அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி போன்ற படங்களில் அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார்.

காதலும் விளக்கமும்
அதேபோல், தெலுங்கிலும் சீதாமா வக்கிட்லோ சிரிம்ல்லே சேட்டு, பலூபு, மசாலா, கீதாஞ்சலி, சர்வதிகாரி போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது வெப் சீரிஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்க மறுத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் கூறியுள்ளார் அஞ்சலி.

தவறான உறவில் இருந்தேன்
சமீபத்தில் அஞ்சலி கொடுத்துள்ள ஒரு பேட்டியில், தான் தவறான உறவில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் ஜெய்யுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர்களது காதல் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் தான், அஞ்சலி தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் தான் திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக் ரிலேஷன்ஷிப்
பெயரை குறிப்பிடாமல் ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதாக அஞ்சலி கூறியுள்ளார். மேலும் அது தவறான உறவு எனவும் அஞ்சலி மனம் திறந்து தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அழுத்தமாக கூறியுள்ளார் அஞ்சலியின் இந்த பேட்டி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. அதேபோல் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும், ஃபால்ஸ்' என்ற வெப் தொடரிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.