இதுக்கு பேரு ஜாக்கெட்டா?.. அனு இமானுவேலின் போட்டோவை உற்றுப்பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்!
சென்னை : நடிகை அனு இமானுவேலின் விவகாரமான ஜாக்கெட்டை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இமானுவேலும் ஒருவர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

நடிகை அனு இமானுவேல்
மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதையடுத்து, தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார்.

காந்த கண்ணழகி
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடலுக்கு ஏற்றால் போல, லுக்குவிட்டு ரசிகர்களை கிக்கேற்றினார் அனு இமானுவேல். இந்த படத்திற்கு பின் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு தமிழில் படவாய்ப்பு வராததால் டோலிவுட்டுக்கு என்றார்.

அவ்வப்போது கிசுகிசுவில்
இதையடுத்து, அம்மணிக்கு தெலுங்கில் பட படவாய்ப்புகள் குவிந்ததை அடுத்து, அங்கேயே செட்டிலான அனு இமானுவேல் அவ்வப்போது கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார். ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநரை காதலிப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து, அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷுனை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

இதுக்கு பேரு ஜாக்கெட்டா?
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், சூடு பறக்க ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வழவழப்பான சேலையில், மணிகளை கொண்டு தைக்கப்பட்ட ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு ஒல்லி பெல்லி இடைதெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேரு ஜாக்கெட்டா என்றும், எவ்வளவு உற்றுபார்த்தாலும் எங்களுக்கு குழப்பம் தீரவில்லை என்றும் கமெண்ட்டடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











