»   »  நடிகை அனு பிரபாகர் இரண்டாவது திருமணம்!

நடிகை அனு பிரபாகர் இரண்டாவது திருமணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட நடிகை அனு பிரபாகர் - நடிகர் ரகு முகர்ஜிக்கு நேற்று திருமணம் நடந்தது. அனுவுக்கு இது இரண்டாவது திருமணம். ரகுவுக்கு மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் ஆகிய படங்களில் நடித்தார் அனு பிரபாகர். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரது தாயார் காயத்ரி கன்னடத்தில் பிரபல நடிகை.

Actress Anu Prabhakar marries second time

அனுவுக்கும் நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருக்கும் 2002-ல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடால் இருவரும் 2014-ல் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் நடிகர் ரகு முகர்ஜியுடன் அனுவுக்கு காதல் ஏற்பட்டது.

Actress Anu Prabhakar marries second time

ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு, பாவனா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். பின்னர் பாவனாவையும் விவாகரத்து செய்துவிட்டார்.

அனுவும், ரகு முகர்ஜியும் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் எளிய முறையில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

English summary
Actress Anu Prabhakar has got married with actor Raghu yesterday secretely at Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil