»   »  அனுஜா ஐயருக்கு நவம்பரில் டும் டும் டும்

அனுஜா ஐயருக்கு நவம்பரில் டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஜா ஐயருக்கு நவம்பரில் திருமணம் நடைபெற உள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பரத்ராம் என்பவரை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியள்ளன.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு கையில் புகையும் சிகரெட்டுடன் அசால்டாக வசனம் பேசும் ரிப்போர்டராக நடித்திருப்பார் அனுஜா ஐயர். தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, விண்மீன்கள், காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அனுஜா ஐயர்

அனுஜா ஐயர்

விஜய் டிவியில் வெளியான சீரியலிலும் நடித்த அனுஜா ஐயருக்கு விண்மீன்கள் திரைப்படத்தில் பெண் எழுத்தாளராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

தொழிலதிபர் மணமகன்

தொழிலதிபர் மணமகன்

சினிமா வாய்ப்புக்காக காத்திருக்காமல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார் அனுஜா. அனுஜா ஐயருக்கும், தொழிலதிபர் பரத் ராம் என்பவருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த ஜூன் 29ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமண நிச்சயம்

திருமண நிச்சயம்

தனது திருமண நிச்சயம் பற்றி கருத்து கூறியுள்ள அனுஜா, இது காதல் திருமணமல்ல, திருமணத்திற்கு முன்பு பரத்தை சில முறை சந்தித்திருக்கிறேன். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினோம். ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டோம் என்றும் அனுஜா ஐயர் கூறியுள்ளார்.

நவம்பரில் திருமணம்

நவம்பரில் திருமணம்

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் என்று கூறும் அனுஜா, நவம்பர் மாதம் 18ம் திருமணம் நடைபெறவுள்ளது. தற்போது நான் சந்தோஷமான சூழலில் வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

சந்தோச எதிர்பார்ப்பு

சந்தோச எதிர்பார்ப்பு

திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நானும் ஆவலுடன் எனது திருமண நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அனுஜா ஐயர்.

Read more about: anuja iyer wedding heroine cinema
English summary
Actress Anuja Iyer is engaged to a city-based entrepreneur Bharat Ram. The engagement ceremony took place at a star hotel in the city on June 29.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil