என் மார்பகங்கள் வேடிக்கை பொருளா? பிரபலங்களும் மனிதர்கள்தான்.. கொந்தளித்த நடிகை!

மும்பை : என் மார்பகங்கள் உங்களுக்கு வேடிக்கை பொருளா என பிரபல சீரியல் நடிகை ஆத்திரத்தில் கொந்தளித்துள்ளார்.

மாடல் அழகியான சாவி மிட்டல் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

3 Bahuraaniya, Ghar Ki Lakshmi Betiyann,Viraasat போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 42 வயதான சாவி மிட்டலுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

தொலைக்காட்சி நடிகையான சாவி மிட்டல் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டார். இதையடுத்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சவால்களை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

மோசமான கருத்து

மோசமான கருத்து

அண்மையில், குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த சாவி மிட்டல், கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோவை பார்த்த ஒரு இணையவாசி, நடிகை சாவியின் மார்பகம் பற்றி மோசமான கருத்தை பகிர்ந்து இருந்தார். இந்த கமெண்டால் மனவேதனை அடைந்த சாவி மிட்டல், அந்த இணையவாசிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

என் மார்பகங்கள் வேடிக்கை பொருளா?

என் மார்பகங்கள் வேடிக்கை பொருளா?

இதில், என் மார்பகங்களை ஒரு திண்பண்டம் போல விவாதித்து வேடிக்கை பொருளாக பார்க்கின்றனர். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தப்பிப்பிழைத்தவள் நான், இந்த உறுப்பை உயிருடன் மற்றும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்காது.

பிரபலங்களும் மனிதர்கள் தான்

பிரபலங்களும் மனிதர்கள் தான்

உங்களின் மோசமான கமெண்டுகளால் என் மனம் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? பிரபலங்களை விமர்சிப்பது உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. பிரபலங்களும் மனிதர்கள்தான், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. சாதாரண மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் புற்றுநோய் வரும், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்களும் உயிர்வாழ போராடுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்

உங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்

மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை எப்படி நடக்கிறது என்று தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். "லம்பெக்டோமி" இந்த வகை புற்றுநோயால் தான் நான் பாதிக்கப்பட்டேன். இதற்கான சிகிச்சை முறையில் கட்டியை அகற்றுகிறார்கள் மார்பகத்தை அல்ல. இதைவிட தீவிரமாக புற்றுநோய் பரவும் போது தான் மார்பகமும் எடுக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, சரியான நேரத்தில் உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள் என நடிகை சாவி மிட்டல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X