»   »  ஸ்ரீதேவி அக்கா மகனும், "காத்தாடி" தன்ஷிகாவும்!

ஸ்ரீதேவி அக்கா மகனும், "காத்தாடி" தன்ஷிகாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்கள்... இல்லை சில மாதங்களாகவே தமிழ் மட்டுமில்லாமல் பிறமொழி ரசிகர்காளால் பெரிதும் எதிர்பார்ப்பு டிரெண்ட்டில் சுற்றி வரும் திரைப்படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம். அத்திரைப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே அதில் யாராருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் உள்ளது என்று நம்மால் உணரமுடிகின்றது.

அந்த திரைப்படத்தில் நடித்த நாயகிகளுள் ஒருவரான தன்ஷிகா கபாலி ரஜினிகாந்தின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை குறிவைக்கும் காட்சியை அனைவரும் பார்த்திருக்கலாம். அங்கு எடுத்த துப்பாக்கியை கீழே வைக்காமல் "காத்தாடி"யில் போலீஸாக ப்ரோமோசன் ஆகியுள்ளார் தன்ஷிகா.

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் படம் "காத்தாடி" இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பேபி சாதன்யா:

முக்கிய வேடத்தில் பேபி சாதன்யா:

சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர் குட் சுப்ரமணி, சேரன்ராஜ். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யா நடிக்கிறார். இத்திரைப்படம் பற்றி இயக்குனர் கல்யாணிடம் கேட்கும் பொழுது அவர் கூறியதாவது,

குழந்தைத் திருட்டு:

குழந்தைத் திருட்டு:

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கிறோம். படத்தின் ஆரம்பம் முதல், இறுதிவரை காமெடி கலாட்டாவாக இருக்கும். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள்.

காப்பாற்றும் தன்ஷிகா:

காப்பாற்றும் தன்ஷிகா:

போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம். எனது, கத சொல்ல போறோம் படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அதில் உள்ள செண்டிமெண்ட் காட்சிகள் தான். அது இந்த படத்திலும் காட்சிகளுக்கேற்ப இருக்கிறது. இந்த படமும் நிச்சயமா வெற்றியடையும்.

கத சொல்லப் போறோம்:

கத சொல்லப் போறோம்:

கத சொல்ல போறோம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும் இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள். ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.கல்யாண்.

அழுத்தமான தன்ஷிகா:

அழுத்தமான தன்ஷிகா:

நடிகை தன்ஷிகா தமிழ் திரைப்படங்களில் அவ்வவ்போது தலை காட்டினாலும், கபாலி படத்தில் அவருக்கு அமைந்த இந்த அழுத்தமான கதாப்பாத்திரம் தான் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மேலும் இத்திரைப்படத்திற்கு ஜெமின் ஜோம்அயாநாத் ஒளிப்பதிவு செய்ய, பவன் பாடல்களுக்கான இசையையும், தீனா படத்தின் பின்னணி இசையையும் கையாண்டுள்ளனர்.

English summary
Actress dhanshika played as a police office charchter in kaththaadi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil