Don't Miss!
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- News
‛‛இசை உலகில் அவரது பாரம்பரியம் இருக்கும்’.. வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி
- Sports
உம்ரான் மாலிக்கை சுற்றிய மத சர்ச்சை.. ஹோட்டல் வீடியோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆனது??
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செய்தியாளர்கள் முன் கதறி அழுத நடிகை தர்ஷா குப்தா..நடந்தது என்ன?
சென்னை : நடிகை தர்ஷா குப்தா செய்தியாளர் கேட்ட கேள்வியால் கதறி கதறி அழுதுள்ளார். அந்த வீடியோவை பார்த்த இளவட்டங்கள் செல்லத்தை யாருடா அழவைத்தது என் கேள்வி கேட்டு வருகின்றனர்.
மாடல் அழகியான தர்ஷா குப்தா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். அதன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
கண்களால் காதல் மொழி பேச முடியுமா? ப்பா.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டிய தர்ஷா குப்தா!

நடிகை தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை ஹோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஓ மை ஹோஸ்ட் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட தர்ஷா குப்தாவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டனர். அப்போது, சதீஷ் உடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்த தர்ஷா குப்தா. அந்த சம்பவத்திற்கு பிறகு சதீஷ் என்னிடம் போனில் பேசினார். இப்போ எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

எனக்கு கவர்ச்சி தெரியல
மேலும் கிறிஸ்துமஸ் பாண்டிகைக்கு வாழ்த்து கூறி கவர்ச்சி போட்டோ போட்டு இருக்கீங்க, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கவர்ச்சியா போட்டோ போடலாமா என ஒரு செய்தியாளர் கேட்க. அது ஒரு போட்டோஷூட் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எடுத்தேன் அவ்வளவு தான் எனக்கு அதில் கவர்ச்சி தெரியவில்லை என்றார்.

உங்களுக்கு ஓவர் திமிரா?
அதன் பின் ஒரு நிருபர், உங்களுக்கு சினிமாவில் முதிர்ச்சி இல்லை என்றும் அனைவர் இடத்தில் அடிக்கடி நீங்கள் கோவப்படுவதாக சொல்லப்படுகிறது ஏன் அப்படி கோவப்படுகிறீர்கள் என்று கேட்டார். அப்படியா நான் யாரிடத்திலும் அப்படி கோவப்பட்டது இல்லை நீங்கள் சொல்லித்தான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்கு தெரிகிறது கூறியிருந்தார்.

கதறி கதறி அழுத தர்ஷா குப்தா
இதையடுத்து, நேற்று ஏடாகூடமாக கேள்வி கேட்ட செய்தியாளரை எதர்ச்சையாக சந்தித்த தர்ஷா குப்தா, நான் என்ன அப்படி பண்ணிட்டேன் ஏன் கோவப்பட்டேன், திமிரா நடந்துக்கிறேன் என்றெல்லாம் கேள்வி கேட்குறீங்க என்றார். என் கூட பழகுறவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும். நான் இன்னசென்ட், எல்லாருக்கும் நான் மரியாதை கொடுப்பேன். நான் என்ன பண்ணிவிட்டேன் என்று என்னைப்பார்த்து இப்படி கேள்வி கேட்குறீங்க, தப்பா பேசுறீங்க என்று கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதார். இதையடுத்து, அவரை செய்தியாளர்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் யாருடா செல்லத்தை அழவைத்தது என்று கேட்டு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.