Dharsha gupta: இன்ஸ்டாகிராம் மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் தர்ஷா குப்தா.. வாயை பிளந்த ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்போதும் அழுத முகத்துடன் இருந்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருந்த அதிகமான பாலோவர் தான். அவர்களின் மனம் கஷ்டப்படும் படி, பிக் பாஸ் வீட்டில் சரியாக விளையாடாமல் வெளியே வந்த இவர், மீண்டும் இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டு அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகை தர்ஷா குப்தா அறிமுகம் ஆனார். அந்த சீரியலில் பாவாடை தாவணி, புடவையுடன் வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின், செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Dharsha Gupta instagram
Photo Credit:

நடிகை தர்ஷா குப்தா: இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஆனால், அங்கும் அவரால் திறன்பட செயல்பட முடியாமல் போனதால், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது இவர் யோகி பாபுவுடன் மெடிக்கல் மிராக்கிள் ஒரு சின்ன ரோலில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் : சோஷியல் மீடியாவில் மட்டும் பிரபலமாக இருந்த தர்ஷா குப்தா, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு எப்படியாவது முன்னுக்கு வந்துவிடலாம் என நினைத்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், அவன் என்னை, இப்படி பேசிவிட்டான், இவள் எனக்கு சாப்பாடு தரவில்லை என தொட்டதுக்கு எல்லாம் அழுதுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்குள் மேல் தர்ஷா குப்தாவின் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள், நீ பிக் பாஸ் வீட்டில் இருந்தது போதும் என மொத்தமாக வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

இவ்வளவு சம்பாதிக்கிறாரா?: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியே வந்த தர்ஷா குப்தா, மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது instagram பக்கத்தில், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ஒரே வாரத்தில் நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் வந்து, காயப்பட்டுப்போன தனது ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து, தினம் தினம் ஏதாவது போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். instagram ரசிகர்களுக்காக தனியாக சப்க்ரைப் பட்டனை வைத்துள்ளார். இதில் ஸ்பெஷலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு சப்ஸ்கிரைபருக்கு 499 வீதம் மொத்தம் 759 சபஸ்கிரைப் மூலம் ஒரு மாதத்திற்கு மட்டும் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்தை பெற்று வருகிறார் தர்ஷா குப்தா. இந்த தகவலை கேள்விப்பட்டால் இணையவாசிகள், நடித்து சம்பாதிக்க முடியாததால், இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை போட்டு சம்பாதிக்கும் தர்ஷா குப்தா மிகவும் திறமையானவர்தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X