அரை நிர்வாண கோலத்தில் பணிப்பெண்.. கணவருடன் சேர்ந்து டார்ச்சர் செய்த விஷால் பட நடிகை!

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் டிம்பிள் ஹாயதி. இவர் தமிழில் நடிகர் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படத்திலும், பிரபுதேவாவின் தேவி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஹைதராபாத்தில் தனது கணவரும் வசித்து வரும் இவர் மீது, பணிப்பெண் அளித்து இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவை சேர்ந்த 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் டிபிள் ஹயாதி வீட்டில் பணி பெண்ணாக கடந்த மாதம் 22ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அவர் தான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே, நடிகை டிம்பிள் ஹாயதியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அவமானம் படுத்தியதாகவும், உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்துவது மட்டுமில்லாமல் கெட்ட வார்தைகளால் திட்டுவதாக புகாரளித்துள்ளார்.

Dimple Hayathi maid police
Photo Credit:

அரை நிர்வாண கோலத்தில் வீடியோ: கடந்த 29ஆம் தேதி டிம்பிள் ஹயாதி வீட்டில் நாய் தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த நடிகையும் அவரது கணவரும் சேர்ந்து கொண்டு, எனது கால் ஷூவிற்கு உனது வாழ்க்கை ஈடாகாது என மோசமான வார்த்தையால் திட்டியதோடு, பெற்றோரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறி கூறியுள்ளார். இவர்கள் செய்யும் டார்ச்சர் அனைத்தையும் வீடியோவில் பதிவு நான் நினைத்த போது, என எனது ஃபோனை நடிகையின் கணவர் உடைத்து விட்டார். மேலும் இருவரும் சேர்ந்து எனது ஆடை கிழிந்து விட்டனர். நான் அரை நிர்வாணமாக இருக்கும் போதே, என்னை அந்த கோலத்தில் வீடியோவாக எடுத்தார்கள். நான் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்து விட்டேன் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நான்கு பிரிவுகளில் பிலிம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.
4 பிரிவுகளில் வழக்கு: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபிலிம் நகர் காவல் ஆய்வாளர், நாங்கள் வீட்டுப் பெண் அளித்த வாக்குமூலத்தை ஆய்வு செய்துள்ளோம். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். 27 வயதே ஆன டிம்பிள் ஹாயதி, கல்ஃப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பிரபு தேவாவின் தேவி 2 திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், வீரமே வாகை சூடும், கிலாடி, யுரேகா, கடலகொண்ட கணேஷ், ராமபாணம் போன்ற திரை படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 23 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X