“எலும்புக்கூடு,பேண்டா பாட்டில்“ என உருவ கேலி செய்தார்கள்..நொந்து போன திவ்யாபாரதி!
சென்னை: பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி உருவ கேலி செய்யப்படுவது குறித்து மனம் நொந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட திவ்யபாரதி, மாடலிங்கில் மிகவும் பிரபலமானார். சோஷியல் மீடியாவில் இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.
அதன் பிறகுதான் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. படவாய்ப்புக்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

நடிகை திவ்யாபாரதி
நடிகை திவ்யாபாரதி கடந்த ஆண்டு சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே, துணிச்சலான ரோலில் நடித்த திவ்யாபாரதிக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து, நடிகை திவ்யாபாரதி, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் படத்தில் நடித்துள்ளார்.

உருவகேலி செய்தார்கள்
இந்நிலையில் நடிகை திவ்யாபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருவகேலிக்கு உள்ளானதை மனம் நொந்து பதிவிட்டுள்ளார். அதில், அந்த பதிவு எதையோ விளக்கவோ அல்லது நிரூபிக்கவோ இல்லை. சமீப நாட்களாக என்னை பலர் உருவகேலி செய்து வருகிறார்கள். அதாவது நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன், இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்றும், பேண்டா பாட்டில் போல் இருப்பதாகவும், முட்டப் பெண் எலும்புக்கூடு, என்றும் மோசமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

எலும்புக்கூடு...
எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், என் வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்த புகைப்படம் தான் இது. இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என் மனதில் மாறாத காயத்தை ஏற்படுத்தியது. இது எந்த வகையிலும் என்னுடைய தவறு அல்ல. என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையில் அப்படி அமைந்துள்ளது. 2015ம் ஆண்டு, நான் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி போட்டோஷூட்களை அதில் பகிர்ந்தேன். அப்போது அனைவரும் என் உடல் அமைப்பை பாராட்டினார்கள்.

என்னை வியந்து பாராட்டினார்கள்
நான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், பலர் என்ன வொர்க்அவுட்டை செய்கிறீர்கள் என்று கேட்டார்கள் எனது உடல் அமைப்பை பலர் ரசிப்பதை பார்த்து நானே வியந்து போனேன். அப்போதுதான் நம்மை வெறுப்பவர்களும், நம்மை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.

எப்போதும் வலிமையாக இருப்போம்
அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன் என திவ்யா பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











