ரசிகரை கொலை செய்த நடிகர்.. ஆபாச மெசேஜ் அனுப்பியவர்கள் லிஸ்ட்டை வெளியிட்ட தனுஷ் பட நடிகை
பெங்களூரு: கன்னட திரையுலகத்தை சேர்ந்த நடிகர் தர்ஷன் என்பவரது தோழியும், நடிகையுமான பவித்ராவுக்கு ரேணுகாசாமி என்ற ரசிகர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறி அவரை கடத்தி தர்ஷன் கொலை செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையி அவரை காவல் துறையினர் கைது செய்தார்கள். பிறகு ஜாமீனில் வெளிவந்த அவர்; இப்போது தி டெவில் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை திவ்யா போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
கன்னட திரையுலகத்தின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷன். அவரை அவரது ரசிகர்கள் தி பாஸ் என்று அழைப்பதும் வழக்கம். அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க ரேணுகாசாமி என்ற ரசிகர்; தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ராவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தர்ஷனுக்கும் தெரியவந்தது.
கொலை செய்த நடிகர்: அதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளான தர்ஷன், தனது ஆட்களை வைத்து ரேணுகாசாமியை கடத்தி சித்ரவதைப்படுத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் கொலை செய்தது உறுதியானதால் தர்ஷனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிறகு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் அவர். இப்போது தி டெவில் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

வரவேற்ற ரசிகர்கள்: அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்துக்கு சென்று வந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டுகளை போட்டனர். இதற்கிடையே தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும் நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில், "சாமானியருக்கு உச்ச நீதிமன்றம் நம்பிக்கை அளிக்கும். ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
லிஸ்ட் போட்ட நடிகை: அவரது இந்தக் கருத்துக்கு தர்ஷனின் ரசிகர்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றினார்கள். மேலும் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது இன்ஸ்டா பக்கத்துக்கு தர்ஷனின் ரசிகர்களை வரவேற்கிறேன். ரேணுகாசாமியின் குடும்பத்துக்கான நீதி குறித்து கருத்து தெரிவியுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். ஆனால் தர்ஷனின் ரசிகர்களோ, திவ்யாவுக்கு மேற்கொண்டு ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் கொதிப்படைந்த அவர், 'தர்ஷனின் ரசிகர்கள் ஆபாச மெசேஜ்களை அனுப்பிவருகிறார்கள். ரேணுகாசாமி பவித்ராவுக்கு அனுப்பிய மெசேஜுக்கும், இவர்கள் எனக்கு அனுப்பிய மெசேஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் பெண்களை வெறுப்பவர்கள். அவர்கள்தான் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்' என கூறி; தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய 11 ரசிகர்களின் பெயரை வெளியிட்டிருக்கிறார். இவ்விவகாரம் மேற்கொண்டு இந்த விஷயத்தில் பரபரப்பை கூட்டியிருக்கிறது. திவ்யாவை பொறுத்தவரை தமிழில் அவர் குத்து, பொல்லாதவன் என பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











