மாயாவாக கலக்க காத்திருக்கும் திவ்ய பாரதி.. பாய் பிரெண்ட் பத்தி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை : நடிகை திவ்யபாரதி, ஜிவி பிரகாஷுடன் இணைந்து சமீபத்தில் வெளியான படம் பேச்சுலர்.
இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான கவனத்தை பெற்றது. ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது.
இதையடுத்து தற்போது மதில் மேல் காதல் படத்தில் முகென் ராவுடன் இணைந்து நடித்துள்ளார் திவ்யபாரதி.

பேச்சுலர் பட நாயகி
ஆக்சஸ் பிலிம்சின் சார்பில் டில்லி பாபு தயாரித்திருந்த படம் பேச்சுலர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்தப் படத்தில் கவர்ச்சி தூக்கலாக இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜிவி பிரகாஷ்.

கோயம்புத்தூர் பொண்ணு
கோயம்புத்தூரை சேர்ந்த திவ்யபாரதி, கடந்த 2015ல் நடைபெற்ற அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர். தொடர்ந்து விளம்பரப் படங்கள், மாடலிங் என தன்னை பிசியாக்கிக் கொண்ட நடிகை திவ்யபாரதிக்கு பேச்சுலர் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகத்தான் ரிலீசானது. ஆனாலும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்
படம் பேச்சுலர் தலைப்புக்கேற்ப இளைஞர்களுக்கான படமாகவே வெளியானது. முதல் படத்திலேயே கவர்ச்சிப் புயலாக அதிரடி காட்டினார் திவ்ய பாரதி. இந்தப் படம் இறுதிக்கட்ட சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்புகள் வந்ததாக தற்போது அவர் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

மதில் மேல் காதல் படம்
அவ்வாறு கிடைத்த வாய்ப்புதான் மதில் மேல் காதல் படம். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகென் ராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் திவ்ய பாரதி. முதலில் பேச்சுலர் படம் வெளியான பின்பே அடுத்தப்படத்தின் வாய்ப்பை ஏற்க வேண்டும் என்று தான் திட்டமிட்டதாகவும் ஆனால், மதில் மேல் காதல் படத்தின் கதையை கேட்டபின்பு உடனடியாக ஓகே சொன்னதாகவும் திவ்ய பாரதி குறிப்பிட்டுள்ளார்.

காதலுக்கான புது விளக்கம்
வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பார்த்தவுடன் காதலில் முகேன் மற்றும் திவ்ய பாரதி விழுவதாக காணப்படுகிறது. தொடர்ந்து காதலை தக்க வைத்துக் கொள்ள அன்பு மட்டும் போதாது என்பதை அவர்கள் உணர்வதை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளது.

முகென் ராவ் 2வது படம்
படத்தில் ரைசா வில்சன், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பிக் பாஸ் மூலம் பிரபலமான முகென் ராவ் முன்னதாக வேலன் படத்தின்மூலம் அறிமுகமான நிலையில் தற்போது ஸ்டைலிஷ்ஷான இந்த கேரக்டரை ஏற்றுள்ளார்.

ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி
இதனிடையே இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி விஜயா பாரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேசிய திவ்ய பாரதி தன்னுடைய பாய் ப்ரெண்டாகும் தகுதி குறித்து பேசினார். தன்னுடைய கேரியருக்கு சப்போர்ட்டிவ்வாகவும் தன்னை மிகவும் சரியாக புரிந்துக் கொள்வதும்தான் அந்த தகுதி என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தான் சிங்கிள்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

மாயா கேரக்டரில் திவ்ய பாரதி
மேலும் இந்தப் படத்தில் மாயா என்ற கேரக்டரில் திவ்ய பாரதி நடித்துள்ளார். இதேபோல முகென் ராவ் சிவாவாக நடித்துள்ளார். இந்தக் கேரக்டர்கள் சிறப்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோல படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











