»   »  விளம்பர நிறுவனங்களுக்கு ஷாக் தந்த டாப் ஹீரோயின்!

விளம்பர நிறுவனங்களுக்கு ஷாக் தந்த டாப் ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்ஸன். இவர் இப்போது கோலிவுட், பாலிவுட் எனத் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.

பிரிட்டன் மாடலாகவும் வலம் வரும் இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து அவர்களின் புதிய வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், தங்களுடைய நிறுவனங்களின் விளம்பரங்களில் இவரை நடிக்கவைக்க முயற்சித்து வருபவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Actress gives shock to ad companies

எமி ஜாக்‌ஸன், ஒரு விளம்பரத்திற்கு போட்டோஷூட் எடுக்க தனது சம்பளத்தை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தியதால் அனைத்து விளம்பர நிறுவனங்களும் தற்போது திணறி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிக்க மூன்று கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் இவர்.

Actress gives shock to ad companies

நடிகை எமி ஜாக்ஸன் சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எந்திரன் 2.O படத்தில் நடித்து இருக்கிறார். இந்தp படம் வெளியான பின் மேலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விளம்பர நிறுவனத்தினர் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கின்றனராம்.

English summary
Actress Emy jackson is going to increase her pay for acting in advertisements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil