»   »  'தல' அஜீத்துக்கு போட்டியாக பாலிவுட்டில் ஒரு நடிகை

'தல' அஜீத்துக்கு போட்டியாக பாலிவுட்டில் ஒரு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை குல் பனாக் விமானம் ஓட்டப் பழகி முறையாக பைலட் உரிமம் பெற்றுள்ளார்.

2003ம் ஆண்டு வெளியான தூப் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தவர் பஞ்சாபி பொண்ணான குல் பனாக். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலிவுட்டில் நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்து கதாபாத்திரங்களை தேர்வு செய்தார்.

சில துணிச்சலான கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

1999ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் குல் பனாக். இதையடுத்து அந்த ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

பைக்

பைக்

அழகிப் பட்டம் வென்ற குல் மாடல் ஆனார். விளம்பர படங்களில் நடித்தார். குல் நடிகை, மாடலாக இருந்தாலும் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். ஆண்களை விட திறமையாக பைக் ஓட்டுவார் குல் என பெயர் எடுத்தவர்.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி

திரையுலகிற்கு வந்த குல் அப்படியே அரசியல் பக்கமும் சென்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சன்டிகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பைலட்

பைலட்

மாடல், நடிகை, அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட குல் பனாக் விமானம் ஓட்ட கற்றுக் கொண்டு முறையாக பைலட் உரிமம் பெற்றுள்ளார். இதை அவரே புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். குல்லின் கணவரும் ஒரு பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress, model, politician, biker Gul Panag has got pilot licence. She has shared her pictures in Pilot uniform on instagram.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil