Don't Miss!
- News
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
- Technology
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
நடிகை ஹன்சிகாவிற்கு இன்று திருமணம்.. சங்கீத் பார்ட்டியில் என்னா குத்தாட்டம் தெரியுமா?
சென்னை : நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார்.
இன்றைய தினம் ஹன்சிகா சோஹைல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதற்கான கொண்டாட்டங்கள் கடந்த மாதம் முதலே நடந்து வருகின்றன.
இதனிடையே நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சியில் ஹன்சிகா போட்ட குத்தாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வருங்கால
கணவருடன்
பூஜையில்
பங்கேற்ற
ஹன்சிகா..
முழு
வீச்சில்
தயாராகும்
திருமண
ஏற்பாடுகள்!

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து அரண்மனை படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மகா படத்தின் கலவையான விமர்சனம்
சமீபத்தில் இவரது நடிப்பில் மகா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார். சிம்புவுடன் ஹன்சிகா காதல் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. இந்த பிரேக் அப்பிற்கு பிறகு மகா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதனால் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆயினும் படம் சொதப்பியது.

ஹன்சிகா திருமணம்
இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ஆயினும் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நிலையில் தற்போது அவரது திருமணம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. தனது பிசினஸ் பார்ட்னர் சோஹைல் கத்தூரியாவுடன் இன்றைய தினம் ஹன்சிகாவின் திருமணம் நடைபெறவுள்ளது. இதையொட்டி பாரீசின் ஈபிள் டவர் அருகே சமீபத்தில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சங்கீத் பார்ட்டியில் ஹன்சிகா குத்தாட்டம்
இன்றைய தினம் நடைபெறவுள்ள திருமணத்தையொட்டி கடந்த மாதம் முதலே ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. இன்றைய தினம் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவரது திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதில் ஹன்சிகா அனைவருடனும் இணைந்து சூப்பரான நடனம் செய்தார்.

களைகட்டிய நிகழ்வுகள்
இந்த நிகழ்ச்சியில் அழகான உடையில் மணமக்கள் காணப்பட்டனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் மணமக்கள் வெள்ளை நிற உடையில் மிகவும் அழகாக நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம்
ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரின் முன்டோட்டா அரண்மனையில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற மெகந்தி மற்றும் சுஃபி நிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் திருமணமும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.