புருசன் வீட்டில் ஏகப்பட்ட பிரச்னை.. பெயரில் மாற்றம் செய்த ஹன்ஷிகா மோத்வானி.. என்ன ஒரு தெளிவு!

மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு 2025 ஆம் ஆண்டு பல்வேறு சவால்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து சர்ச்சைகளும், சிக்கல்களும் உருவாகி வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹன்சிகாவிற்கு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சர்ச்சைகள், சகோதரனின் மனைவி இவர் மீது அளித்த குடும்ப கொடுமை புகாரில் இருந்து தொடங்கியது.

கடந்த ஜனவரியில், ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான தொலைக்காட்சியை தொகுப்பாளினியும் நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ், ஹன்சிகா உட்பட கணவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். தனது கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி மற்றும் ஹன்சிகா ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாக முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார்.

முஸ்கான் அளித்த புகாரில், தனது கணவரின் தாயும், சகோதரியும் ( ஹன்ஷிகா) திருமண வாழ்க்கையில் தலையிட்டு, கணவருடன் சேர்ந்து வாழ முடியாதபடி பிரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், ஹன்சிகா விவாகரத்து செய்யப் போவதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின. கடந்த 2022 ஆம் ஆண்டு ஹன்சிகா தொழிலதிபரான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார். சோஹைல், ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவராக இருந்தார். தனது தோழியின் திருமண வாழ்க்கையை நாசமாக்கியவர் என்ற விமர்சனத்தையும் ஹன்சிகா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Actress Hansika Motwani Changed Her Name Hansika Motwanni After Faces Challenges In 2025

விவாகரத்து வதந்திகள் பரவி வரும் நிலையில், ஹன்சிகா தனது குடும்பப் பெயரை மாற்றியுள்ளார். அவரது தாயின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். "மோத்வானி" என்ற குடும்பப் பெயரின் ஸ்பெல்லிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு 'N' கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் அதிர்ஷ்டத்திற்காக பெயர்களில் மாற்றம் செய்வதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இதுவும் என்று கூறப்படிகிறது.

மகள் ஹன்சிகாவின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் நீங்குவதற்காக தாய் மோனா கண்டுபிடித்த வழி இதுவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகா தனது பெயரின் மாற்றத்தை அறிவிக்கும் ஒரு வீடியோவை யூடியூபில் பகிர்ந்துள்ளார். அதில், "எனது வாழ்க்கையின் புதிய அப்டேட்டைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த வீடியோ. 2025 எனக்கு ஒரு சவாலான பயணமாக இருந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actress Hansika Motwani Changed Her Name Hansika Motwanni After Faces Challenges In 2025

அம்மாதான் காரணமே: அவர் பேசுகையில், "எனது தாயின் விருப்பப்படி, எனது குடும்பப் பெயரின் ஸ்பெல்லிங்கில் ஒரு மாற்றத்தை நான் செய்துள்ளேன். இதுதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்பும் வாழ்க்கையின் புதிய அப்டேட். இது குறித்து எனது தாயுடன் நிறைய வாக்குவாதங்கள், விவாதங்கள் செய்தேன். இறுதியில் அவரது விருப்பத்திற்கு இணங்க நான் முடிவு செய்தேன்" என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம்: "இனிமேல் மக்கள் எனது பெயரை Hansika Motwanni என்று பயன்படுத்தலாம். 'Motwani' என்ற பெயரில் ஒரு கூடுதல் 'N' சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல் 'Motwani'யின் ஸ்பெல்லிங் 'Motwanni' என்று இருக்கும். என்னை விமர்சிப்பவர்களும், எனக்கு நன்மை நினைப்பவர்களும், என்னைப் பற்றி கட்டுரைகள் எழுதுபவர்களும், வதந்திகளைப் பரப்புபவர்களும் இந்த ஸ்பெல்லிங்கை சரியாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்" என அவர் கூறினார். ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இதேபோன்று தங்கள் பெயர்களில் மாற்றங்களைச் செய்துள்ளனர். பெரும்பாலும், இது எண் ஜோதிடத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X