Hansika: கப்பலா கவுந்து போச்சு.. வெட்ட வெளியில் கன்னத்தில் கை வைத்த ஹன்சிகா!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் பரவிய செய்திக்கு நடிகை ஹன்சிகா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாலி தீவில் ஜாலியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இணையத்தில் அவர் பகிர்ந்துள்ள போட்டோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீய வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

Hansika Motwani divorce instagram
Photo Credit:

ஹன்சிகா மோத்வானி: தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகா தான் காரணம் என பல தகவல்கள் இணையத்தில் பரவியது. ஆனால், இது எல்லாம் உண்மை இல்லை எல்லாமே வதந்தி தான் என ஹன்சிகா டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மனம் உடைந்து பேசி இருந்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்: திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியாவை விட்டு பிரிந்துவிட்டதாகவும், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்தி வெளியானது. ஹன்சிகாவிற்கு தனது கணவரின் குடும்பச் சூழலுக்கு ஏற்படி இருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டை அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. இதை புரிந்து கொண்ட சோஹேலின் பெற்றோர். அதே வீட்டில் மேல் மாடி அறைக்கு சென்றுள்ளனர். இருந்த போதும், ஹன்சிகாவிற்கும் சோஹேலுக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு மாறாததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவியது.

பாலித்தீவில் ஹன்சிகா: இந்த வதந்திகள் குறித்து கருத்து இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா தற்போது தனது நண்பர்களுடன் ஜாலியாக பாலித்தீவில் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சிரிக்கும் எமோஜியை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். விடுமுறையை கொண்டாடுவதற்காக பாலி தீவில் இருக்கும் ஹன்சிகா, கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். ஆனால், ஹன்சிகா பாலி தீவிற்கு கணவருடன் செல்லாமல் தனியாக நண்பர்களுடன் தான் சென்றுள்ளார் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X