ஹன்சிகாவின் 105 மினிட்ஸ்… பல மொழிகளில் வெளியாகிறது!

சென்னை : ஹன்சிகா மட்டுமே சிங்கிள் ஷாட்டில் நடிக்கும் 105 மினிட்ஸ் படத்தினை உலகிலுள்ள பல நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Recommended Video

ஏன் இந்த முடிவு Hansika Body Transformation | Upset ஆன Fans, Maha, Simbhu | Filmibeat Tamil

இந்தப் படத்தில் ஹன்சிகா மட்டுமே நடித்திருக்கிறார் . வேறு எந்த நடிகரும் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.

இது ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படமாகும்.

105 மினிட்ஸ்

105 மினிட்ஸ்

உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 Minutes படத்தினை இயக்குனர் ராஜு டுஸ்ஸா எழுதி இயக்குகிறார். மேலும், இப்படத்தை தயாரிப்பாளர் பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரிக்கிறார். விக்ரம் வேதா கைதி படங்களுக்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹன்சிகா பிறந்த நாள் அன்று வெளியானது. கலங்கிய கண்களுடன் ஜன்னலின் உள்ள தண்ணீரை துடைப்பது போல போஸ்டர் இருந்தது. சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் , தனிமையில் இருக்கும் ஹன்சிகா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் 105 மினிட்ஸ் திரைப்படத்தின் கதை .

105 மினிட்ஸ் ஒரே ஷாட்டில்

105 மினிட்ஸ் ஒரே ஷாட்டில்

இந்த திரைப்படத்தில் ஹான்சிகாவைத் தவிர வேறுயாரும் இல்லை. சமீபத்தில் பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. 105 மினிட்ஸ் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். one not Five Minutes படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் 20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது

பல மொழிகளில்

பல மொழிகளில்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும், சைனீஸ், கொரியன் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

மஹா

மஹா

ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படமாகும். இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவின் பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. க்ரைம், த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

ஹன்சிகா கடைசியாக அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹன்சிகாவுக்கு தற்போது கைவசம் எந்த திரைப்படங்களும் இல்லாததால் 105 மினிட்ஸ் மற்றும் மஹா திரைப்படங்கள் வெளியானால், அது நிச்சயம் ஹன்சிகாவுக்கு ஒரு திருப்புமுனை படங்களாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X