Don't Miss!
- News
ஸ்பெஷல்.. 6 கோடி வருடம் பழமையானது! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதிய கலர்புல் புகைப்படங்களை பகிர்ந்த ஹன்சிகா மோத்வானி.. க்யூட் என ரசிகர்கள் கமெண்ட்!
மும்பை : நடிகை ஹன்சிகா மோத்வானி -சோஹைல் கத்தூரியா இருவருக்கும் கடந்த மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் முக்கியமான பிரபலங்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் பங்கேற்றனர்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
சிவாஜி படத்தின் அப்பட்டமான காப்பி... வாரிசு படத்தை வைத்து செய்த பயில்வான் ரங்கநாதன்!

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. குட்டி குஷ்பூ என்று பெயர் பெற்ற ஹன்சிகா, கொழுக் மொழுக் என்று இருந்த தன்னுடைய உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.

ஹன்சிகாவின் மஹா படம்
இந்த மாற்றம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. சமீபத்தில் அவரது நடிப்பில் மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் அவருடன் சிம்பு இணைந்து நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

ஹன்சிகா -சோஹைல் திருமணம்
இதனிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை மணக்கவுள்ளதாக அறிவித்த ஹன்சிகா, கடந்த டிசம்பர் மாதத்தில் அவரை திருமணம் செய்துக் கொண்டார். ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரைத்தான் ஹன்சிகா மணந்துள்ளார்.

கலர்புல் புகைப்படங்கள்
இந்த திருமணத்தையடுத்து கலர்புல்லான புகைப்படங்களை ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் தன்னுடைய திருமண புகைப்படங்களை மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் மிகவும் அழகாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
இந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாப்பிள்ளை படத்தில் தமிழில் இவரது என்ட்ரி அமைந்தது. தன்னுடைய கொழுக் மொழுக் உடல்வாகு மற்றும் அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா, விஜய், ஜெயம்ரவி, சுந்தர் சி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.