»   »  'போகன்' பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஹன்சிகா!

'போகன்' பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஹன்சிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'போகன்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை, நடிகை ஹன்சிகா வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

தனி ஒருவன் படத்துக்குப்பின் அரவிந்த் சாமி- ஜெயம் ரவி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் போகன். ரோமியோ ஜூலியட் லட்சுமணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.


Actress Hansika release Bogan first look

தனி ஒருவன் படத்தில் அழகான மற்றும் அலட்டிக் கொள்ளாத வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமி இப்படத்தில் நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் போகன் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது.


சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் அரவிந்த் சாமி போலீஸ் உடையுடன் காணப்பட்டார். இதனால் அவர் ஹீரோவாக நடிக்கிறாரா? இல்லை வில்லன் வேடமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹன்சிகா இன்று வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.


இப்படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.பிரபுதேவா தயாரிப்பில் உருவாகி வரும் போகன் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Today Actress Hansika release Bogan first look Poster in Her Twitter Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil