»   »  கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது

கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது

Posted By:
Subscribe to Oneindia Tamil

'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போகுது'... சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நடிகை இனியா குறித்து பாக்யராஜ் அடித்த கமெண்ட் கமெண்ட் இது.

இப்போது இனியா அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.

Actress Iniya's reply to Bhagyaraj

அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. சரியாக நடக்க முடியவில்லை. இதனால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும்தான் வந்தது. அழைப்பிதழ் வரவில்லை. காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்குத் தெரிவித்தேன். என் காலை புகைப்படம் எடுத்தும் அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை.

பாக்யராஜ் சார் சீனியர் அவரை மதிக்கிறேன். படக்குழு சொன்ன தகவலை வைத்து அவர் மேடையில் இப்படிப் பேசி இருக்கிறார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை பொறுப்பு இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம்," என்றார்.

English summary
In a reply to director Bhagyaraj, actress Iniya says that due to her health issues she couldn't attend Sathura Adi 3500 movie audio launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X