பிகினியில் ஜான்வி கபூர்… அசத்தல் போட்டோஸ் உங்களுக்காக!
மும்பை : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூருடன் துபாயில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.

ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவான திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் 2018ம் ஆண்டு இஷான் தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத் கைராக் என்ற மராத்தி மொழியின் ரீ மேக் ஆகும்.

படு பிஸி
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா தி கார்கிள் கேர்ள் , தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜொர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

காதலிப்பதாக கிசுகிசு
முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற ஜான்வி கபூர், அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டான நிலையில் இருவரும் திடீரென பிரிந்து விட்டார். தற்போது இவர், தோஸ்தானா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனை ரகசியமாக சந்திப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

பாலைவனத்தில் சவாரி
ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் அவர்களது நண்பர் ஓர்ஹான் அவத்ரமணியுடன் துபாய்யில் விடுமுறையை கழித்து வருகிறார். அவர்கள் ஊருக்கு வந்ததில் இருந்தே இன்ஸ்டாகிராம் கணக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது தங்கையுடன் பாலைவனத்தில் சவாரி சென்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் வைரல் ஆனது.
Recommended Video

பிகினியில்
இதையடுத்து, தற்போது இவர், பிகினியில் நிலா வெளிச்சத்தில் நிலா மகளாக அம்சமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லுங்கி நடனம் என தலைப்பு வைத்துள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











