»   »  நடிகை ஜோதிர்மயி கார் விபத்தில் சிக்கினார் - மயிரிழையில் உயிர்பிழைப்பு

நடிகை ஜோதிர்மயி கார் விபத்தில் சிக்கினார் - மயிரிழையில் உயிர்பிழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை ஜோதிர்மயி கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.

தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஜோதிர்மயி. கேரளாவைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கும், மலையாள இயக்குனர் அமல்நீரத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Actress jothirmayi escapes from an accident

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொச்சியில் வசித்து வந்த இவர்கள் மாகே பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கொங்கிபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த பஸ் இவர்களின் கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் அவரது கணவர் அமல்நீரத் இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Actress Jothirmayi and her husband just escaped from an accident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil