வாய்ப்பு கேட்டால் மிட்நைட்ல கால் பண்றாங்க...வேதனையில் புலம்பிய நடிகை!

சென்னை : படவாய்ப்பு கேட்டால் மிட்நைட்ல கால் பண்ணுறாங்க என்று மனவேதனையில் புலம்பி உள்ளார்.

சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி சன் மியூசிக் சேனலில் விஜேவாக மீடியாவிற்குள் நுழைந்தார்.

இதையடுத்து, நடிகை காஜல், வசூல்ராஜா எம்பிபிஎஸ், இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காஜல் பசுபதி

காஜல் பசுபதி

படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் தனியாகவே இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி, அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட்டான விஷயங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். சமீபத்தில், ரவீந்திரன் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது பணத்திற்காகத்தான் என ஒரு நெட்டிசன் கூறியிருந்தார். இந்த சர்ச்சைக்கு பதிளித்த காஜல், நயன்தாரா திருமணம் செய்தாலும் தப்புனு சொல்லுவீங்க, மகா, ரவியை திருமணம் செய்தாலும் மகா செய்ததுதான் தப்புனு சொல்றீங்க. என்ன ஒரு ஆம்பள புத்தி என்று அந்த நெட்டிசனை வெளு வெளுவென வெளுத்துவிட்டார்.

மிட்நைட்டில் போன் பண்றாங்க

மிட்நைட்டில் போன் பண்றாங்க

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காஜல் பசுபதி, என் நெருங்கிய தோழியுடைய காதலனின் நண்பன் பிரபல தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரிடம் ஏதாவது சீரியலில் நடிக்க வாய்ப்பு இருக்குமா என்று கேட்டேன். அப்போது எந்த பதிலும் சொல்லாத அந்த நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மிட்நைட்டில் போன் செய்கிறார்.

வேதனையில் புலம்பினார்

வேதனையில் புலம்பினார்

அது மட்டும், இல்லாமல், எனக்கு அந்த மாதிரி பொண்ணு வேணும், இந்த மாதிரி பொண்ணு வேணும் என்று அந்த நேரத்தில் என்னிடம் கேட்டால் என்ன அர்த்தம், இப்படி நெருங்கிய நண்பனே நம்மிடம் தவறாக பேசும் போது, மற்றவர்களிடம் எப்படி வாய்ப்பு கேட்க முடியும். இதனால், யாரிடமும் எந்த வாய்ப்பையும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன், வாய்ப்பு வந்தால் வரட்டும் என்று மன வேதனையில் புலம்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X