தாய்மை என்னை மாற்றிவிட்டது..காஜல் அகர்வாலின் நெகிழ்ச்சிப்பதிவு!

சென்னை : குழந்தை பிறந்து 6 மாதங்கள் எப்படி வேகமாக போனது என்று தெரியவில்லை என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர்.

தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா, கோமாளி போன்ற படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக இவர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியன் 2 படத்தில்

இந்தியன் 2 படத்தில்

நடிகை காஜல் அகர்வால், திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்த நிலையில், இவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து வருகிறார். மேலும், இந்தியன் 2 படத்திற்காக வெறித்தனமாக சண்டை பயிற்சியும், குதிரை சவாரியும் செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

வேகமாக கடந்து விட்டன

வேகமாக கடந்து விட்டன

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 6 மாதங்கள் எவ்வளவு வேகமாக கடந்துவிட்டன. என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. உன்னை கையில் கைத்துக்கொண்டு பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

சவாலான ஒன்று

சவாலான ஒன்று

நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குழந்தையை கவனித்துக் கொள்வது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதை செய்யும் போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

அடுத்த வாரத்திற்கு போய்விடுவாய்

அடுத்த வாரத்திற்கு போய்விடுவாய்

உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது,இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். என் அன்பே, என் குழந்தை நீல் என பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X