Kajal Aggarwal: நடுக்கடலில் புருஷன் மேல காலைத் தூக்கி போட்டு.. காத்து வாங்கும் காஜல் அகர்வால்

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகை. காஜல் அகர்வால் நடித்துள்ளார் என்றாலே அந்த படத்தை பார்க்க தமிழ் ரசிகர்களை காட்டிலும் தெலுங்கு ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களைக் கொண்டுள்ள காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் ஜாலியாக குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

காஜல் அகர்வால் தனது திரை வாழ்க்கையை இந்தியில் இருந்து தொடங்கியவர் என்றாலும் அவருக்கு நடிகையாக அந்தஸ்து கொடுத்து, அவரை கொண்டாடியது முதலில் தெலுங்கு திரையுலகம் தான். அதன் பின்னர் தான் அவர் தமிழில் நடிக்க வந்தார். இந்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான Kyun! Ho Gaya Na என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்தார். இந்தியில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் எதுவும் சரியாக அமையாததால், தென்னிந்திய சினிமாவில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் தென்னிந்திய சினிமா அவருக்கு வாய்ப்பு மட்டுமல்ல வாழ்க்கையும் கொடுத்தது எனலாம்.

Actress Kajal Aggarwal Shares Her Glamour Photos With His Husband On Instagram Goes Trending
Photo Credit:

தெலுங்கில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஆனால் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா படம் இவரை ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் கொண்டாடும் அளவுக்கு செய்தது. பார்த்திபா என அவர் ஏங்கிக் கொண்டே சொல்லும் காட்சிக்கு இப்போதும், கண்ணீர் விடும் ரசிகர்கள் உள்ளார்கள்.

காஜல் அகர்வாலின் ஹிட்: தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அட்டகாசமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். மாற்றான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரது ஆரம்ப கால தமிழ் சினிமாவில் இவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய படம் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த நான் மகான் அல்ல படம் ரொம்பவும் முக்கியமானது. இப்படி இவரது தமிழ் சினிமா கெரியர் பல வெற்றிகளைக் கொண்டதாக உள்ளது. தமிழைக் காட்டிலும் இவர் தெலுங்கில் தான் அதிக கவனத்தை செலுத்தினார். இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான அன்பைச் சம்பாதித்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.

Actress Kajal Aggarwal Shares Her Glamour Photos With His Husband On Instagram Goes Trending
Photo Credit:

கடற்கரையில் காத்து: இவர் கடந்த 200ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு மகன் பிறந்தார். மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டுள்ளார். கஜால் அகர்வால் தனது நாய் மியாவைத்தான் தனது முதல் குழந்தை என்று அழைத்து வருகிறார். திருமணத்திற்குப் பின்னரும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் தனது கணவர் மீது காலைத் தூக்கிப் போட்டு சாய்ந்தபடி நின்று கொண்டு ரொமான்டிக் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு ரொமாண்டிக்கா காத்து வாங்கறீங்களே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X