Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“பாடி ஷேமிங் செய்யும் முட்டாள்கள்“…. கேலி செய்தவர்களை விளாசிய காஜல் அகர்வால் !
சென்னை : முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை கிண்டலடித்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரவியதை அடுத்து, அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, காஜல் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார்.
தற்போது காஜல் அகர்வால் துபாயில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
முன்னாள்
காதலருக்கு
முத்தம்
கொடுத்தாரா
நடிகை
அபிராமி?
அவரே
சொன்ன
பதிலை
பாருங்க

காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் 2020ம் ஆண்டு தொழிலதிபரான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ்,இந்தியன்2 ஆகிய தமிழ்ப் படங்களில் காஜல் தொடர்ந்து நடித்து வந்தார்.

பாடி ஷேமிங்
கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால், தனது தங்கை மகனுடன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை பாடி ஷேமிங் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இணையத்தில் கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

வாழு, வாழவிடு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் கையாண்டு வருகிறேன். கூடுதலாக, சில கருத்துகள் பாடி ஷேமிங் செய்திகள், மீம்கள் பார்க்கின்றேன். அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம், அது மிகவும் கடினமாக இருக்கலாம், நம் வாழ்க்கையை வாழ்வோம் பிறரையும் வாழவிடுவோம்.

முட்டாள்கள்
பாடி ஷேமிங் செய்யும் முட்டாள்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில், பெண்கள் பலருக்கு நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் குழந்தைக்கு பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு நம் உடல் பெரிதாக, ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம்.

மிக அழகான தருணம்
பிரசவத்திற்குப் முன்பு, நாம் இருந்ததைத் திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது சில சமயங்களில் கர்ப்பத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பதை முழுமையாக திரும்பப் பெற முடியாத சூழ்நிலை நிகழும். இருப்பினும், இந்த மாற்றங்கள் அனைத்தும் இயற்கையானவை ஆகும். கர்ப்பிணிகள் நம் வாழ்வின் இது போன்ற மிக அழகான, தருணத்தில், நாம் சங்கடமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தையை சுமக்கும் நாம் பாக்கியம் கொண்டவர்கள் என பதிவிட்டுள்ளார்.