»   »  'கவர்ச்சி': கார்த்திகா கறார்!

'கவர்ச்சி': கார்த்திகா கறார்!

Subscribe to Oneindia Tamil


எப்படி வேண்டுமானாலும் நடிக்க வச்சுக்கோங்க, ஆனால் கிளாமர் பக்கம் மட்டும் என்னைக் கூட்டிட்டுப் போக அனுமதிக்கவே மாட்டேன் என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் படு கறாராக கூறி வருகிறாராம் கார்த்திகா.


தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் கிடைத்த நல்ல நடிகை கார்த்திகா. முதல் படமான தூத்துக்குடியிலேயே அசத்தியவர் கார்த்திகா. இதையடுத்து மளமளவென்று சில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.

பாலாவின் நான் கடவுள் படத்தில் கூட நடிக்க ஒப்பந்தமாகி சில காட்சிகளில் பிச்சைக்காரியாகவும் நடித்துக் காட்டினார். சபாஷ், சரியான பிச்சைக்காரி என்று பாலா கூட பாராட்டினாராம். ஆனால் என்ன நடந்ததோ, தெரியவில்லை, திடீரென்று படத்திலிருந்து நீக்கி விட்டார் பாலா.

இதனால் விசனத்தில் ஆழ்ந்திருக்கும் கார்த்திகா, கவலையை மறந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தமிழில் தற்போது நிலவி வரும் கடுமையான கிளாமர் போட்டியிலும், தனது கிளாமர் கொள்கையில் கொஞ்சம் கூட தளர்வில்லாமல் படு உறுதியாக இருக்கிறாராம் கார்த்திகா.

அதாவது கொஞ்சம் கூட கிளாமர் காட்ட மாட்டாராம். கனுக்கால் தெரிவதைக் கூட விரும்புவதில்லையாம் அவர். அதேபோல இடுப்பில் அடுப்பு மூட்டி சமைக்கும் விவகாரமும் அவருக்குப் பிடிக்காதாம்.

முகத்தாலேயே யாரையும் வசீகரிக்க முடியும். பாவாடை, தாவணி, புடவையில் இல்லாத கவர்ச்சியா, அரை குறை ஆடைகளில் வந்து விடப் போகிறது என்று சொல்கிறாராம் கார்த்திகா.

கிளாமர் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வச்சுக்கங்க, ஆனால் கிளாமர் மட்டும் வேண்டாமே ப்ளீஸ் என்கிறாராம் கார்த்திகா.

அவருடைய கொள்கைகேற்றபடியே படங்களும் வருவதால் தனது முடிவு சரிதான் என்ற சந்தோஷத்தில் இருக்கிறாராம் கார்த்திகா.

Read more about: karthika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil