குடிபோதையில் ரகளை செய்து போலீசில் சிக்கிய நடிகை...நடந்தது என்ன ?
மும்பை : குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட நடிகை காவ்யா தாப்பர் கைது செய்யப்பட்டார். குடி போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் நடிகை காவ்யா தாப்பர். இவர் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரவ் உடன் இணைந்து மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். ஒருசில தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் காவ்யா தாப்பர் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற காவ்யா இரவு ஒரு மணியளவில் காரில் வெளியே வந்துள்ளார். அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காவ்யா தாப்பரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீசாரிடமும் அவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் நடிகை காவ்யா தாப்பர் கைது செய்யப்பட்டார். மது அருவிந்திவிட்டு வாகனம் ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த காவ்யா, பெண் போலீஸ் ஒருவரின் யூனிஃபார்மை இழுக்க முயன்றுள்ளார். இதில் அந்த பெண் போலீஸ் தவறி கீழ் விழுந்துள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பாகி உள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட காவ்யா, அந்தெரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பைகுலா மகளிர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











