For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிகினியில் மூச்சுமுட்ட வைத்த கீர்த்தி பாண்டியன்... அப்பா பெயரை கெடுக்காதீங்க.. விளாசும் ரசிகர்கள்!

  |

  சென்னை : தும்பா படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் இணையமே திணறும் வகையில் பிகினியில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  முன்னாள் பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

  விஜே ஆனந்த கண்ணன் கடைசி சாட்.. ரசிகர்களுடன் எமோஷனல் பேச்சு.. தீயாய் பரவும் கடைசி வீடியோ! விஜே ஆனந்த கண்ணன் கடைசி சாட்.. ரசிகர்களுடன் எமோஷனல் பேச்சு.. தீயாய் பரவும் கடைசி வீடியோ!

  அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

  அருண்பாண்டியன்

  அருண்பாண்டியன்

  ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் அன்பிற்கினியாள் படத்தில் ரீ எண்டரி கொடுத்தார்.

  தும்பா

  தும்பா

  அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வென்ட்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விரும்பி ரசித்தனர்.

  அன்பிற்கினியாள்

  அன்பிற்கினியாள்

  அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறிய கீர்த்திபாண்டியன். தனது அப்பா அருண்பாண்யனுடன் இணைந்து நடித்தார். அப்பாவும் மகளும் இணைந்து நடித்தது தான் அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் ரீ மேக் தான் அன்பிற்கினியாள்.

  அக்காவை மிஞ்சிவிட்டார்

  அக்காவை மிஞ்சிவிட்டார்

  ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட்டால் இணையத்தை திண்டாட விட்ட இடையழகி ரம்யா பாண்டியனின் உறவுக்கார பெண் தான் கீர்த்திப்பாண்டியன். தற்போது தனது அக்காவை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியில் புயலை கிளப்பி உள்ளார். நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி. அதில், தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு அப்படியே, நிற்கிறார். அதுவும் வெள்ளை நிற பிகினி வேற கேட்கவே வேண்டாம் சும்மா கவர்ச்சி அள்ளுது.

  கவர்ச்சி வேண்டாம்

  கவர்ச்சி வேண்டாம்

  இதனை பார்த்த பலரும், இந்த மாதிரி கவர்ச்சி எல்லாம் உங்களுக்கு வேண்டாம் அப்பாவின் பெயரை காப்பாற்றுங்கள் அது போதும். நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து அப்பாவை பெருமை அடைய செய்யுங்கள் என்று பலர் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  சினிமாவில் சகஜம்

  சினிமாவில் சகஜம்

  ஒரு சில ரசிகர்கள் கூட்டம் வெயில் காலம் வந்துவிட்டால் இப்படி தான் எல்லாவற்றிலும் தராளம் காட்டுவார்கள் அதனை கண்டு கொள்ளாதீர்கள் என்றும், நீங்கள் பாட்டுக்கு கவர்ச்சியில் குதித்து வீட்டீர்கள் அது எல்லா வேண்டாம் ராசாத்தி என்றும், நல்ல அழகாக இருக்கிறீர்கள் என்றும் பல கமெண்ட்ஸ்களை தட்டி விடுகின்றனர். இப்படி கமெண்ட்ஸ்கள் மாறி மாறி வந்தாலும் அதனை கண்டும் காணாமல் இருப்பது நல்லது என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் அதனால் அதனை அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

  கண்ணகி ஃபர்ஸ்ட் லுக்

  கண்ணகி ஃபர்ஸ்ட் லுக்

  கீர்த்தி பாண்டியன் தற்போது கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினத்தன்று வெளியானது. இதில், கீர்த்தி பாண்டியன் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு வருவது போலும் கயிற்றின் மறுமுனையில் ஒரு நபர் தீ வைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒருசில ரசிகர்களிடம் வரவேற்பும் மற்ற சில ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்று வருகிறது.

  English summary
  Keerthi Pandian has sported a hot two piece bikini which has gone viral in a matter of hours. More than the picture, the inspiring message has caught the netizens' attention.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X