Don't Miss!
- News
மத்திய அரசு நிதியை மாற்றி செலவழித்த அதிமுக அரசு! மார்க்சிஸ்ட் பகீர்புகார்! மாஜி மந்திரிக்கு சிக்கல்
- Lifestyle
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
- Sports
சந்திரா.. அவங்க 2 பேரையும் பாத்துக்கோ.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறங்க.. சேவாக் சொன்ன ஆருடம்
- Finance
ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- Automobiles
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்... என்னங்க இப்படி இறங்கிட்டீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!
கொச்சி :நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன. தமிழில் வெளியாகியுள்ள சாணிக் காயிதம் மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடித்து வெளியாகியுள்ள சர்க்காரு வாரிப் பட்டா படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சினிமாவாகிறது
முதல்வர்
ஸ்டாலினின்
வாழ்க்கை...
ஹீரோ
யாரு
தெரியுமா
?

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் துவக்கத்தில் இருந்தே சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படங்களில் இவர் நடித்து வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து கீர்த்தி நடித்துள்ள படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படங்களாகவும் அவருக்கு அமைந்தன.

சாணிக் காயிதம் படம்
சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழில் அவர் நடித்து வெளியானது சாணிக் காயிதம். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமானவர்களை அவர் தேடிச் சென்று பழிவாங்குவதாக இந்தப்படம் அமைந்துள்ளது.

மிரட்டியுள்ள கீர்த்தி சுரேஷ்
படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் இந்தக் கேரக்டரில் மிரட்டியுள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் கீர்த்தி முதல்முறையாக இணைந்து நடித்துள்ள சர்க்காரு வாரி பட்டா படமும் ரிலீசானது. இந்தப் படத்திலும் கீர்த்தியின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

புதிய போட்டோஷூட்
இதனிடையே தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன. குட்டையான மஞ்சள் நிற கவுனில் இந்த புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். கிளாமர் குயினாக இந்தப் புகைப்படங்களில் காட்சி அளிக்கிறார்.

கிளாமர் ரூட்டுக்கு மாற்றம்
நடிக்க வந்த ஆரம்பத்தில் தனக்கு கிளாமர் சரியாக இருக்காது. தான் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறிவந்தார் கீர்த்தி. இந்நிலையில் தற்போது அவர் கிளாமர் ரூட்டிற்கு மாறி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சர்க்காரு வாரி பட்டா படத்தின் பிரமோஷனிலும் அவர் சீ த்ரூ புடவையில் கலந்து கொண்டார்.

ரசிகர்கள் ஷாக்
தனக்கு கிளாமர் செட் ஆகாது என்று கூறியவர் தற்போது இவ்வாறு கிளாமருக்கு மாறி வருவது அவரது ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன், மலையாளத்தில் சொந்த தயாரிப்பான வாஷி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.