Don't Miss!
- News
லாங் நைட்! 4 மாதங்களுக்கு சூரியனுக்கு குட் பை சொல்லும் அண்டார்டிகா.. ஒரு துளி வெளிச்சம் இருக்காதாம்
- Finance
சிபிஐ ரெய்டு: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு.. 9 இடத்தில் சோதனை..!
- Technology
ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..
- Lifestyle
Mangal Gochar 2022: செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 27 வரை இந்த ராசிக்காரங்க எதை செஞ்சாலும் வெற்றி கிடைக்கும்..
- Automobiles
ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!
- Sports
மும்பையின் கையில் ஆர்சிபியின் விதி.. ப்ளே ஆஃப் செல்வது கடினம் தான்.. விழிப்பிதுங்கும் டூப்ளசிஸ்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கீர்த்தி சுரேஷின் காஸ்ட்லியான டிரஸ்.. இத்தனை லட்சமா?.. அப்படி என்ன ஸ்பெஷல் !
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் விருது வழங்கும் விழாவிற்கு அணிந்து வந்த காஸ்ட்லியான டிரஸ் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள மொழியில் பைலட் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக கலக்கி வருகிறார்.
டாப்
நடிகரை
ஏமாற்ற
நம்பர்
நடிகை
வைத்த
சக்சஸ்
பார்ட்டி..
ஒரே
வாரத்தில்
சாயம்
இப்படி
வெளுத்துடுச்சே!

கீர்த்தி சுரேஷ்
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ,விஜய்யுடன் சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். அதோடு நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். அந்த படத்தில் கீர்த்தி நடித்தார் என்பதை விட சாவித்திரியாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
மகாநடி படத்திற்கான தேசிய விருதை வென்றெடுத்த இவர் மற்ற பிரபல நாயகிகள் போலவே இவரும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காயிதம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தில் இவரின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது.

காஸ்ட்லியான டிரஸ்
மார்டன் குயினாக வலம் வந்து கொண்டு இருக்கும் கீர்த்திசுரேஷ், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவிற்கு வந்த கீர்த்தி சுரேஷ் மிகவும் விலை உயர்ந்த ஆடையை உடுத்தி வந்திருந்தார். அந்த உடையின் மதிப்பு ரூ 6 லட்சமாம், அந்த உடையில் எம்ப்ராயிடரி வொர்க் மற்றும் மின்னும் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இந்த உடையின் விலையை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர்.

சர்காரு வாரி பாட்டா
கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார். இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மோசமான திரைக்கதையால் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த 8 படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடலாம் என மலைபோல் நம்பி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.