Keerthy Suresh Net Worth - கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. 33 வயதில் இத்தனை கோடி சொத்தா?.. வாவ் வேற லெவல்

சென்னை: நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். கடந்த வருடம்தான் தனது காதலரான ஆண்டனி தட்டிலை கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டாகி அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அந்த வெற்றிக்கு பிறகு கீர்த்திக்கு பல வாய்ப்புகள் வந்தன. அதனை பயன்படுத்தி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இது ஒருபக்கம் இருக்க தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவர் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

வீழ்ச்சியும், ரீ என்ட்ரியும்: தேசிய விருது வாங்கிய பிறகு வாய்ப்புகள் கொட்டும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு நினைத்தபடி அமையவில்லை. அப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அது அவருக்க் கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் புக்காகி வந்த கீர்த்திக்கு; தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் கதவுகள் திறந்தன. இருப்பினும் அந்தப் படமும் ஃப்ளாப். அதேசமயம் அவர் அப்படத்தின் ஒரு பாடலில் கிளாமர் ரோலுக்கு மாறியிருந்தார்.

Actress Keerthy Suresh Birthday Today Here are Details about Her Net Worth
Photo Credit:

திருமணம்: இதற்கிடையே அவர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். 10 வருடங்களுக்கும் மேலாக இரண்டு பேரும் காதலித்த சூழலில்; வீட்டு சம்மதத்துடன் கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அதில் விஜய், திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. சுமூகமாக அவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து நடிப்பு: திருமணத்துக்கு பின்பு நடிப்பதை அவர் நிறுத்திவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் கணவரின் சப்போர்ட்டோடு தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இருப்பினும் முன்புபோல் நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. சூழல் இப்படி இருக்க அவர் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

சொத்து மதிப்பு: இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவர்; மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறாராம். சென்னையில் ஜிம், ப்ரைவேட் தியேட்டர் அடங்கிய பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்றையும் வைத்திருக்கிறாராம். மேலும், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW, 81 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் என சொகுசு கார்களும் அவர் வசம் உள்ளனவாம். இவரது கணவர் பெரிய தொழிலதிபர். அவரது சொத்தையும் சேர்த்தால் கீர்த்திவசம் மொத்தம் 100 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 33 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா என்று பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X