Don't Miss!
- News
மொட்டை மாடியில் ரொமான்ஸ்.. சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நனவான குஷ்பூவின் கனவு... என்னன்னு அவங்களே சொல்லியிருக்காங்க பாருங்க
சென்னை : நடிகை குஷ்பூ தான் நாயகியாக நடித்த காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்.
இவருக்காக கோயில் கட்டிய சம்பவமும் நடைபெற்றது. இவரது பெயரில் இட்லியும் காணப்படுகிறது.
தொடர்ந்து சீரியல், தயாரிப்பு என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் குஷ்பூ.
தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்ஷமி கலக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி !

நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ நாயகியாக நடித்த காலகட்டத்தில் சிறப்பான நடிகையாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக தன்னை நிரூபித்தவர். முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இவரது கால்ஷீட்டிற்காக நடிகர்கள் காத்திருந்த சூழலும் காணப்பட்டது.

கொண்டாடிய ரசிகர்கள்
இவருக்கு கோயில் கட்டிய சம்பவமும் இருந்தது. இதேபோல இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று பெயரிட்டும் ரசிகர்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து பிரபல இயக்குநர் சுந்தர் சியை மணம் செய்த இவர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பூ
தற்போது தயாரிப்பு, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குடும்பத்தையும் சரியா மெயின்டெயின் செய்து வருகிறார். திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர்ஸ்டாருடன் இவர் இணைந்து நடித்த அண்ணாத்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.

மோகனுடன் ஜோடி
இந்நிலையில் தற்போது வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகிவரும் ஹரா படத்தில் இவர் நாயகியாக நடிக்கவுள்ளார். ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவந்த நடிகர் மோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜயஸ்ரீ இயக்கம்
தாதா87 படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து குஷ்பூ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தெலுங்கு படம் ஒன்றில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

குஷ்பூ மகிழ்ச்சி
இந்நிலையில் மௌனராகம் படத்திலிருந்தே மோகனை தான் பார்த்து வருவதாகவும், அவருடன் இணைந்து முதல்முறையாக தமிழில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். த்ரில்லர் வகை படமாக இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.