For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எடையை குறைத்து.. 90ஸ்க்கு திரும்பிய குஷ்பு... லைக்குகளை அள்ளும் புகைப்படம் !

  |

  சென்னை : இந்திய சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.

  90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.

  உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் என கேட்ட ரசிகர்.. நடிகை குஷ்பு சொன்ன குசும்பு பதிலை பாருங்க!உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் என கேட்ட ரசிகர்.. நடிகை குஷ்பு சொன்ன குசும்பு பதிலை பாருங்க!

  அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வல்லியாக சுற்றிச் சுழல்கிறார்.

  வருஷம் 16

  வருஷம் 16

  1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. அந்த திரைப்படத்திற்கு முன்பாக ரஜினி மற்றும் பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  ஏராளமான படங்களில்

  ஏராளமான படங்களில்

  இதையடுத்து,வெற்றிவிழா, கிழக்கு வாசல், நானும் ரௌடிதான், தாலாட்டு பாடவா, நடிகன், மை டியர் மார்த்தாண்டம், பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.இவரின் நடிப்பை மெச்சும் விதமாக சின்னத்தம்பி திரைப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் குஷ்புவின் பெயர் எதிரொலித்தது.

  முன்னணி நடிகை

  முன்னணி நடிகை

  ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கிய நடிகை குஷ்பு, ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்டு வரும் வித விதமான டிசைன் ஜாக்கெட்டுகள் தான் பெண்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சியை விட அதிகம் பேசப்பட்டது. சினிமா, அரசியல், சின்னத்திரை என அனைத்திலும் சகலகலா வல்லியாக சுற்றிச் சுழன்று வருகிறார்.

  V-CONNECT | KHUSHBOO CHAT PART-03 | குஷ்பு கொடுத்த அண்ணாத்த UPDATE | FILMIBEAT TAMIL
  ஒல்லியான குஷ்பு

  ஒல்லியான குஷ்பு

  திரைத்துறையில் இவர் நுழைந்து கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆனாலும், குஷ்பு மீதான ஈர்ப்பு இன்னும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கும்முனு இருந்த குஷ்பு, கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இருபது நாட்களுக்கு முன்னதாகக் கூட தனது எடை குறைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ட்வீட்டி இருந்தார். தற்போது இவர், சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் மார்டன் உடையில், குஷ்பு உடல் எடை குறைத்து செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், கடின உழைப்பு முடிவுகளை அளிக்கும் போது அந்த மகிழ்ச்சியை விளக்க முடியாது, என டபுள் ஹாட்டின் எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

  பாராட்டிய த்ரிஷா

  பாராட்டிய த்ரிஷா

  உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைத்துக்கொண்ட குஷ்பூவின் புகைப்படத்திற்கு ‘ i love the sequence ' என்று கமெண்ட் போட்டுள்ளார். குஷ்பூவின் ட்ரான்ஸ்பர்மேஷனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Khushbu looks stunning. She has lost a lot of weight and posted a photo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X