பரம சுந்தரியின் பக்குவம்… ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டது அடுத்த விஜய் பட கதாநாயகியா ?

மும்பை : நடிகை கிருதி சனன் இந்தி திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் 2014 ஆம் ஆண்டு மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த " Nenokkadine " எனும் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்வையில் விழுந்தார்.

நடிகை கிருதி சனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்ட ஒரு பதிவு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

பிலிம்பேர் விருது

பிலிம்பேர் விருது

2014ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமாகி அதே ஆண்டில் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கிருதி சனன். சபீர் கான் இயக்கத்தில் ரொமான்டிக் ஆக்சன் கதை களத்தில் உருவான படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். டைகர் ஷெராப் கதாநாயகனாக நடித்த இந்த படம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட்டான பருகு படத்தின் ரீமேக் ஆகும்.

பரம சுந்தரி சாதனை

பரம சுந்தரி சாதனை

கிருதி சனன் நடித்த Mimi திரைப்படம் Covid காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நேரடியாக Netflix ஸில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அந்த படத்தில் இருந்து " பரம சுந்தரி " எனும் பாடல் யூ டியூபில் வெளியாகி வைரல் ஆனது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான அந்த பாடலை பாடியவர் ஸ்ரேயா கோஷல். இந்த பாடல் பல மில்லியன் பார்வைகளை பெற்று அந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக நின்றது.

விஜய் படத்தின் கதாநாயகியா ?

விஜய் படத்தின் கதாநாயகியா ?

Beast படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகி யார் எனும் குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதலில் ராஷ்மிகா மந்தனா என சொல்லப்பட்டது. அதன்பின் பல முன்னணி கதாநாயகிகள் பெயர் அடிபட்டது. இதற்கிடையில் விஜய் கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிருதி சனன்க்கு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நல்ல மனம்

நல்ல மனம்

வெறுமனே நடிப்பது மட்டும் இல்லாமல் நல்ல காரியங்களும் செய்பவர் என சொல்வது போல கிருதி சனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்னிங் செய்யும் ஒரு வீடியோவை பதிவிட்டு " Sketches cyber hub ல் இணைந்து 1000 km ஓடி 100 Sketches ஷூக்களை இந்திய பார்வையற்ற விளையாட்டு அசோசியேஷன் இல் இருக்கும் நூறு குழந்தைகளுக்கு இலவசமாக தந்து அவர்களின் சிரிப்பில் மகிழ்ந்தேன் " என பதிவிட்டுள்ளார். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட கிருதி சனன் யை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X