For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... சொக்கவைக்கும் அழகில் குஷ்பூவின் புது போட்டோஷூட்!

  |

  சென்னை : தமிழ் திரைத்துறையில் ஒரு பொன்னான காலம் எது என்றால் அது 80ஸ் 90ஸ் என்று கூறுவார்கள். இந்த காலகட்டத்தில் பல வெற்றிப்பெற்ற படங்கள் வெளியாகி வசந்த காலமாக இருந்தது.

  இந்த காலத்தில் நம் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் குஷ்பூவும் ஒருவர், தமிழ்நாட்டில் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

  டொரான்டோ தமிழ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. விருதுகளை குவித்த தமிழ் படங்கள்.. பட்டியல் இதோ! டொரான்டோ தமிழ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. விருதுகளை குவித்த தமிழ் படங்கள்.. பட்டியல் இதோ!

  குண்டு குண்டுனு இருந்த குஷ்பூ சமீபகாலமாக சிக்குனு உடலை பெற்று இளம் நடிகைகளைப்போல விதவிதமான போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மழையாய் பொழிந்து வருகின்றனர்.

  குஷ்பூ

  குஷ்பூ

  புசுபுசுன்னு கன்னம் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகுடையவர் குஷ்பூ, மல்லிப்பூபோல் இட்லி என்ற நிலை மாறி குஷ்பூ இட்லி என்று கூறும் அளவுக்கு ரசிகர்கள் இவர் மீது தீராத அன்பை பொழிந்து வந்தனர். வருஷம் 16 திரைப்படத்தில் அறிமுகமான குஷ்பூ இன்றும் அதே வனப்புடன் வலம் வருகிறார்.

  முன்னணி நடிகர்களுடன்

  முன்னணி நடிகர்களுடன்

  ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கியவர் நடிகை குஷ்பூ. இவர ஜோடி சேர்ந்து நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

  எப்போதும் பிஸி

  எப்போதும் பிஸி

  இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதற்கு சற்று ஓய்வு கொடுத்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல், அரசியல் என்று தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்டு வரும் வித விதமான டிசைன் ஜாக்கெட்டுகள் பெண்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

  அரசியலில் தீவிரம்

  அரசியலில் தீவிரம்

  கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியைக் கண்டு துவளாமல் அரசியலில் தொடர்ந்து பயணிக்கிறார்.

  V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-02 | எனக்கு photoshoot னா அலர்ஜி | FILMIBEAT TAMIL
  இளம் நடிகைகளுக்கு போட்டியாக

  இளம் நடிகைகளுக்கு போட்டியாக

  இன்றைக்கு உருவகேலி பற்றிய விழிப்புணர்வு பெருகி வரும் நேரத்தில், பலரும் ஸ்லிம்தான் அழகு என்று உடலை வேக வேகமாக குறைத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பூ தற்போது உடலை பாதியாக குறைத்து சும்மா சிக்குனு மாறி உள்ளார். இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ஏகப்பட்ட லைக்குகளை பெறுகின்றன.

  சுடிதாரில் சூப்பர் போஸ்

  சுடிதாரில் சூப்பர் போஸ்

  தற்போது இவர் சுடிதாரில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த குஷ்பூவின் தீவிர ரசிகர் ஒருவர் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்று அவரை வர்ணித்து பாட்டுப்பாடி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மழையாக பொழிந்து வருகின்றன.

  English summary
  Khushbu Sundar recently took to her social media to talk about how she is on a weight loss journey and shared a picture, too. she stunned netizens with her latest pictures.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X